பழைய முறையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு புதுச்சேரி அரசு பணி வழங்க வேண்டும் என, பட்டய பயிற்சி பெற்ற வேலையில்லா ஆசிரியர் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து கூட்டமைப்பின் தலைவர் வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கை:
பட்டயப்பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் 400 பேர் டெட் (டிஇடி) தேர்வில் 90 மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று வேலைக்காக காத்திருக்கிறோம். அரசு பள்ளிகளில் காலியாக ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசு இதுவரை டெட் தேர்வில் 90 சதவீத மதிப்பெண் பெற்றவர்களையே தேர்வு செய்தது.
இந்நிலையில், கடந்த 18ம் தேதி வெளியிட்டுள்ள அரசாணையில், பள்ளி கல்வித் துறை படிப்படியாக சி.பி.எஸ்.இ., திட்டத்திற்கு மாற்றம் செய்யப்படுவதால், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றதிலிருந்து 7 ஆண்டுகள் வரை மட்டுமே செல்லுபடியாகும்; இதுவரை டெட் தேர்வில், தேர்வு பெறாத ஆசிரியர்கள் சிடெட் தேர்வு மட்டுமே எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.
இந்த அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது பயிற்சி முடித்துள்ளவர்கள் தமிழக பாடத் திட்டத்தில் படித்தவர்கள். சி.பி.எஸ்.இ., பாடத் திட்டம் இதற்கு முற்றிலும் மாறுபட்டது. எனவே, குழப்பம் மிகுந்த இந்த அரசாணையை ரத்து செய்துவிட்டு, நடைமுறையில் இருந்த பழைய முறையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்க வேண்டும். இவ்வாறு அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment