வரும் திங்கட்கிழமை முதல் 6 நாட்கள் வங்கிகள் செயல்படுவது குறித்து வெளியான தகவல்களுக்கு நாட்டின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, 30ம் தேதி திங்கட்கிழமையும், 31ம் தேதி செவ்வாய்க்கிழமையும் வங்கிகள் வழக்கம்போல செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது.
ஏப்ரல் 1ம் தேதி ஆண்டு கணக்கு முடிவு, 2 மற்றும் 3ம் தேதி மஹாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி ஆகிய நாட்களில் வங்கிகள் செயல்படாது என்றும், 4ம் தேதி சனிக்கிழமை வங்கிகளில் பணப்பரிவர்த்தனைகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை அரசு கருவூலத்துக்கு விடுமுறை என்ற நிலையில், அரசு ஊழியர் ஊதியம் 6ம் தேதிக்கு தள்ளிப் போக நேர்ந்தால், அதற்கு வங்கிகள் பொறுப்பாகாது என்றும் பாரத ஸ்டேட் வங்கி தரப்பில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment