ஏப்ரல் 23ம் தேதி முதல், அனைத்து அரசு பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை விட, பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.இதுகுறித்து, கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
தொடக்கப் பள்ளிகளில், ஏப்ரல் 15ம் தேதி முதல், வகுப்பறை தேர்வுகள் முடிந்து விடுமுறை அறிவிக்கப்படும். 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஏப்ரல் 20ம் தேதி வரை தேர்வுகள் இருக்கும். தேர்வுக்கு பின், 2 நாட்கள் பள்ளிகள் வைக்கப்பட்டு, ஏப்ரல் 23ம் தேதியில் இருந்து கோடை விடுமுறை விட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment