டிஎன்பிஎஸ்சி குரூப்-2- ஏ தேர்வு மூலம் உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு மார்ச் 21-ம் தேதி நடைபெறுகிறது.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2-ஏ தேர்வு மூலம் உதவியாளர் பணிக்கு (2013-2014-ம் ஆண்டுக்கானது) தேர்வுசெய்யப்பட்டு, பள்ளிக்கல்வித்துறைக்கு 346 பேர் பணி ஒதுக்கீடு பெற்றுள்ளனர். அவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலம் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களில் அமைந்துள்ள கலந்தாய்வு மையத்தில் மார்ச் 21-ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.
பணிக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளவர்கள் தங்கள் முகவரியில் குறிப்பிட்டுள்ள மாவட்டத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலகத்தில் நடைபெறும் கலந்தாய்வில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும். டிஎன்பிஎஸ்சி பட்டியலின் வரிசை எண்ணின்படி, கலந்தாய்வு நடைபெறும். கலந்தாய்வு தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகவே மையத்துக்கு வந்துவிட வேண்டும். வரும்போது, டிஎன்பிஎஸ்சி வழங்கிய ஒதுக்கீட்டு ஆணை, கல்விச்சான்றிதழ்கள், சாதிச்சான்று மற்றும் இதர ஆவணங்களை தவறாமல் எடுத்துவர வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment