குடிமை பணிக்கான நேர்முகத் தேர்வை எதிர்கொள்வதற்கான பயிற்சி வகுப்பில் சேர, முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கடந்த ஆண்டுக்கான, மத்திய தேர்வாணையத்தின் முதன்மைத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதும், சென்னை பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலையில் உள்ள இந்திய குடிமைப் பணி தேர்வு பயிற்சி மையத்தில், குடிமைப் பணிக்கான மாதிரி ஆளுமைத் தேர்வு நடத்தப்படும்.
இதற்கான விண்ணப்பப் படிவங்கள், முதன்மை தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதும், இரண்டு அலுவலக வேலை நாட்களில், பயிற்சி மைய அலுவலகத்தில் வழங்கப்படும். தமிழகத்தை சேர்ந்த அனைத்து மாணவர்களும், இப்பயிற்சியில் சேர தகுதியுடையவர்கள்.
இப்பயிற்சி மையத்தில் படித்தவர்கள், இதர பயிற்சி மையத்தில் படித்தவர்கள், பயிற்சி மையத்தில் சேராமல், தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள், இப்பயிற்சியில் சேர்த்து கொள்ளப்படுவர். தகுதி பெற்ற மாணவர்கள், பயிற்சி மையத்தில், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், மூன்று புகைப்படம், முதன்மை தேர்வுக்கு விண்ணப்பித்த, விண்ணப்ப நகல் ஆகியவற்றை சமர்பித்து, தங்கள் பெயரை பதிவு செய்துகொள்ள வேண்டும்.
பயிற்சி மையத்தில், மத்திய தேர்வாணையம் நடத்தும் நேர்காணலை, தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள, பயிற்சி அளிக்கப்படுகிறது. டில்லி செல்லும் மாணவர்களுக்கு, பயணப்படியாக 2,000 ரூபாய் வழங்கப்படும். 10 நாட்கள், தமிழ்நாடு இல்லத்தில் தங்கி, ஆளுமைத் தேர்வில் கலந்துகொள்ள ஏற்பாடு செய்யப்படும்.
மாதிரி ஆளுமை தேர்வு நடத்தப்படும் நாட்கள் குறித்த விவரம், www.civilservicecoaching.com இணையதளத்தில் வெளியிடப்படும்.
மேலும் விவரங்களுக்கு 044 - 2462 1475 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
No comments:
Post a Comment