JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
Sunday, March 25, 2012
1040 இடைநிலை ஆசிரியர் பணியிடம் தொடக்கப் பள்ளி தலைமையாசிரியராக நிலை உயர்த்தி முதல்வர் உத்தரவு.
தமிழக அரசு செய்தி வெளீயீடு எண். 227 நாள். 25.03.2012 மாணவர்கள் இடைநிற்றல் இன்றி கல்வி பயிலுவதற்கு ஏதுவாக பள்ளிகள் அவர்களின் இல்லங்களுக்கு அருகிலேயே இருக்கும் பொருட்டு, தொடக்கப்பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகவும், நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தி முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏற்கெனவே ஆணையிட்டுள்ளார். நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டதால், நிலையிறக்கம் செய்யப்பட்ட 1040 தொடக்கப் பள்ளிகளில் உள்ள ஒரு இடைநிலை ஆசிரியர் பணியிடத்தை தலைமை ஆசிரியர் பணியிடமாக நிலை உயர்த்தி முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
2341 அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் 5 ஆண்டுகளில் கணினி வழிக் கல்வி " BOOT " திட்டத்தின் கீழ் செயல்படுத்த முதல்வர் உத்தரவு.
1880 அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும், 461 உயர்நிலைப்பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்த ரூ. 31.21 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் உத்தரவு.
10 மேல்நிலைப் பள்ளிகளில் அறிவுச்சார் பள்ளிகள் நிறுவவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும், தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டம் ஆர்.புதுப்பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி, தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, விருதுநகர் மாவட்டம், வீரசோழனில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி, திண்டுக்கல் மாவட்டம் பழநியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆகிய 5 பள்ளிகளில் முதற்கட்டமாக 1 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் அறிவுசார் பள்ளிகள் (ஸ்மார்ட் பள்ளி) நிறுவுவதற்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இதற்கென முதல் தவணையாக 26 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் விடுவிக்க ஆணையிட்டுள்ளார். இவையன்றி, திருச்சி மாவட்டத்தில் திருச்செந்துறை, அயிலாப்பேட்டை, சோமரசம்பேட்டை, எட்டரை, இனாம்குளத்தூர் ஆகிய 5 இடங்களில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில், 1 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் அறிவுசார் பள்ளிகள் தொடங்குவதற்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா அனுமதி வழங்கியுள்ளார். தமிழக அரசு செய்தி வெளீயீடு எண். 227 நாள். 25.03.2012 பதிவிறக்கம் செய்ய...
No comments:
Post a Comment