JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
Sunday, March 25, 2012
அரசு விடுமுறையன்று பத்தாம் வகுப்பு தேர்வா?
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கும் நாள் அரசு விடுமுறையா? என்ற குழப்பம் மாணவர்களிடையே ஏற்பட்டுள்ளது.
வரும் ஏப்ரல் 4ம் தேதி 10ம் வகுப்பு பொதுத் தேர்வு துவங்குகிறது. ஆனால், அன்றைய தினம் மகாவீர் ஜெயந்தி என்பதால், அரசு விடுமுறை என்பதாக காலண்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அரசு விடுமுறையன்று தேர்வா? என்று மாணவர்களும், ஆசிரியர்களும் குழப்பமடைந்துள்ளனர்.
ஆனால், இது தேர்வுத் துறையிடமிருந்து வந்த அட்டவணை என்று உயர்கல்வி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.அந்தத் தேர்வு அட்டவணையிலோ, ஏப்ரல் 5ம் தேதி மகாவீர் ஜெயந்தி என்று குறிப்பிட்டு, அன்றைய தினம் விடுமுறை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, ஏப்ரல் 4ம் தேதி குறிப்பிட்டுள்ளபடி தேர்வு நடக்குமா? அல்லது இடையில் ஏதேனும் மாறுதல் ஏற்படுமா? என்று மாணவர்களும், ஆசிரியர்களும் குழப்பத்துடன் உள்ளனர். இந்தக் குழப்பத்திற்கு விரைவில் தீர்வுகாண வேண்டும் என்றும் அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
No comments:
Post a Comment