JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
Thursday, March 29, 2012
தொடக்கக்கல்வி - ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளின் ஆசிரியர்கள் / மாணவர்கள் வகுப்பறையில் கைப்பேசியினை பயன்படுத்த தடை.
தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 004027 / J3 / 2012, நாள். 22.02.2012.
தொடக்கக்கல்வி இயக்கக கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துவகைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பள்ளி வேலை நேரத்தில் வகுப்புகள் நடத்தும் போது கைப்பேசியில் பேசுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
கைப்பேசியினை Silent Mode / Offline Mode செய்ய வைத்து பள்ளியின் செயல்பாடுகளில் கற்பித்தல் பணிக்கு எந்தவிதமான இடையுறு ஏற்படாவண்ணம் மாணவர்களுக்கு முன்மாதிரியாக திகழவேண்டும். மேலும் பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவிகளும் பள்ளி வளாகத்தில் கைப்பேசி பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மாணவ / மாணவியர் பள்ளி வேலை நேரத்தில் கைப்பேசி பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகளை பெற்றோர்களுக்கு அறிவித்து தங்கள் குழந்தைகள் கைப்பேசி பயன்படுத்துவதை முறைப்படுத்த வேண்டும். கூடுமானவரை மாணவ / மாணவியர் பள்ளிகளுக்கு கைப்பேசி கொண்டுவருவதை தவிர்க்க தக்க நடவடிக்கை பெற்றோர்கள் மேற்கொள்ள வேண்டும் என தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment