JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
Sunday, March 25, 2012
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு! உதவி தொடக்க கல்வி அலுவலர் சங்கம் முடிவு!
உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு 3 சதவீதம் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் பதவி உயர்வு வழங்காததற்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவது என தமிழ்நாடு உதவி தொடக்க கல்வி அலுவலர் சங்க மாநில செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டது.தமிழ்நாடு உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சங்க மாநில அவசர செயற்குழு கூட்டம் தஞ்சை லாலிஹாலில் 23.03.2012 அன்று நடந்தது.
மாநில தலைவர் சுந்தரராஜன் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. மாநில பொருளாளர் ஆரோக்கியம் முன்னிலை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் பாஸ்கரன் தீர்மானங்களை விளக்கிப் பேசினார். மாவட்ட தலைவர் மதியழகன் வரவேற்றார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
அரசாணை வெளியிடப்பட்டு 4 ஆண்டுகளாகியும் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு 3 சதவீதம் உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி வழங்கப்படாத நிலை நிலவுகிறது. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை 10.12.2011ம் தேதி வழங்கிய தீர்ப்பில் விதி திருத்தத்திற்காக காத்திராமல் 3 மாத காலத்திற்குள் 3 சதவீதம் உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என தீர்ப்பு வழங்கி அந்த காலக்கெடு முடிந்தும் நீதிமன்ற ஆணை நிறைவேற்றப்படாத நிலைக்கு கண்டனம் தெரிவிப்பது.
அடுத்த கட்ட நடவடிக்கையாக தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவது. பதவி உயர்வே இல்லாத தேக்க நிலையை மாற்றிட உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களை கண்ணியக் குறைவாக நடத்தும் தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்பாடுகளை கண்டித்து இயக்க நடவடிக்கை மேற்கொள்வது.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கிழக்கு மண்டல செயலாளர் ராமமூர்த்தி நன்றி கூறினார்.
No comments:
Post a Comment