Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, May 14, 2017

    சுயநிதி கலை கல்லூரிகளுக்கு கட்டண நிர்ணயம்: தமிழக அரசு கட்டணக் குழுவை அமைக்குமா?


    உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி, சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகளில் வழங்கப்படும் பல்வேறு படிப்புகளுக்கு கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்ய கட்டணக் குழுவை தமிழக அரசு எப்போது அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு சமூக ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது.

    தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆள்குறைப்பு நடவடிக்கைகள், ஊதியக் குறைப்பு நடவடிக்கைகள் காரணமாக கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் பொறியியல் படிப்புகளின் மீதான மாணவர்களின் மோகம் படிப்படியாகக் குறைந்து, கலை-அறிவியல் படிப்புகள் மீதான ஆர்வம் அதிகரித்த வருகிறது.
    இதைச் சாதமாக்கிக்கொள்ளும் பல சுயநிதி கல்லூரிகள், இப்போது கட்டணக் கொள்ளையில் இறங்கியுள்ளன. சுயநிதி பொறியியல் கல்லூரிகளுக்கு இணையாக கல்விக் கட்டணத்தையும், நன்கொடையையும் இந்த சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகள் வசூலிப்பதாக புகார்கள் எழுகின்றன.

    ஒரு பருவத்துக்கு ரூ. 20 ஆயிரம் முதல் ரூ. 34 ஆயிரம் வரை கட்டணம்: இந்த கல்வியாண்டுக்கான (2017-18) விண்ணப்ப விநியோகத்தை பல கல்லூரிகள் தொடங்கி விட்ட நிலையில், கல்விக் கட்டண விவரங்களையும் கல்லூரி இணையதளத்தில் வெளியிட்டுள்ளன.
    அதன்படி, சென்னை எழும்பூரில் உள்ள பிரபல மகளிர் கல்லூரி வெளியிட்டுள்ள விவரத்தின் அடிப்படையில் இளநிலை பட்டப் படிப்புகளுக்கு ஒரு பருவத்துக்கு (6 மாதத்துக்கு ஒருமுறை) ரூ.19,500 முதல் ரூ. 34 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
    இதுதவிர கணினி பயிற்சிக்கு ஒரு பருவத்துக்கு ரூ. 2 ஆயிரம், திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு ஆண்டுக்கு ரூ. 1000 போன்ற கூடுதல் கட்டணங்களும் வசூலிக்கப்படுகின்றன. இதன்படி, மூன்று ஆண்டுகள் பட்டப் படிப்பை முடிக்க ஒரு மாணவர் ரூ. 2 முதல் 2.5 லட்சம் வரை கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.
    ரூ. 2.5 லட்சம் மறைமுக நன்கொடை: இந்த நிலையில், பிரபல கலை-அறிவியல் கல்லூரிகள் இணையதளத்தில் வெளியிடும் வெளிபடையான கட்டணத்தைத் தவிர, மறைமுகமாக நன்கொடை வசூலிப்பதாக புகார்கள் எழுந்து வருகின்றன.
    குறிப்பாக, மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டும் பி.காம்., பி.காம். (கணினி அறிவியல்), பிசிஏ, பி.எஸ்சி. போன்ற படிப்புகளுக்கே அதிக நன்கொடை வசூலிக்கப்படுகின்றன.
    கோவை பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரி 2016-17 கல்வியாண்டில் பி.காம். இடத்துக்கு ரூ. 2.5 லட்சம் நிர்ணயித்தது.
    அதுபோல சென்னை உள்ள பிரபல தனியார் கலை, அறிவியல் கல்லூரிகளிலும் பி.காம்., பி.சி.ஏ. இடங்களுக்கு மிக அதிக அளவில் நன்கொடை வசூலித்தது. இதனால், ஏழை மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர் என பேராசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
    இது குறித்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் துணைத் தலைவர் எம்.ரவிச்சந்திரன்: கலை - அறிவியல் கல்லூரிகளில் வசூலிக்கப்பட வேண்டிய கல்விக் கட்டணத்தை கடந்த 1997-ஆம் ஆண்டு நிர்ணயம் செய்து அரசாணையாக (அரசாணை எண்.265) தமிழக அரசு வெளியிட்டது. அதன் பிறகு 19 ஆண்டுகள் கடந்தவிட்ட நிலையில் கட்டணம் மாற்றியமைக்கப்படவே இல்லை. அந்த அரசாணைப்படி, அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகளில் இளநிலை அறிவியல் பட்டப் படிப்புகளுக்கு ரூ 750, வேலைவாய்ப்பை பெற்றுத் தரக்கூடிய பி.காம்., உயிரி அறிவியல் போன்ற படிப்புகளுக்கு ரூ. 1,000 கல்விக் கட்டணம் வசூலிக்க வேண்டும்.
    இந்த கல்லூரிகளில் சுயநிதி பிரிவின் கீழ் வழங்கப்படும் பி.ஏ. போன்ற கலை படிப்புகளுக்கு ரூ. 1,350, இளநிலை அறிவியல் பட்டப் படிப்புகளுக்கு ரூ, 2,850, வேலைவாய்ப்பை பெற்றுத் தரக்கூடிய இளநிலைப் பட்டப் படிப்புகளுக்கு ரூ, 4,750 என்ற வீதத்தில் ஆண்டு கல்விக் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். இதற்கு அதிகமாக, கூடுதல் கட்டணம் வசூலித்தால் சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகிகளுக்கு 2 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை வழங்க 1996-இல் இயற்றப்பட்ட சட்டத்தில் வழிவகை உள்ளது.
    ©(#Regards)®
    ©(#kaninikkalvi.blogspot.in)®
    ©(#Dr.S.Sathish)®
    ஆனால், இந்த அரசாணையை கல்லூரிகள் பின்பற்றுவதில்லை. இதை முறைப்படுத்தும் வகையில் மருத்துவம், பொறியியல் கல்லூரிகளுக்கு உள்ளதுபோல், சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகளிக்கும் கட்டண நிர்ணயக் குழு மூலம் மாணவர்களிடம் வசூலிக்கப்பட வேண்டிய கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண்டும்.
    இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2014-ஆம் ஆண்டு உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் கட்டண நிர்ணயக் குழு அமைக்க வேண்டும். மேலும், சுயநிதி கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு யுஜிசி (பல்கலைக்கழக மானியக் குழு) பரிந்துரை அடிப்படையிலான ஊதியம் வழங்கப்படுதையும் அரசு உறுதி செய்யவேண்டும் என்றார் அவர்.
    *நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்துவது எப்போது?*
    பெரியார் பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற்ற சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிர்வாகங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
    இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 21-ஆம் தேதி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது. அதில், சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் வசூலிக்க வேண்டிய கல்விக் கட்டணம் குறித்து நிர்ணயம் செய்வதற்கான குழுவை 3 மாத காலத்துக்குள் தமிழக அரசு அமைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் முடிய உள்ள நிலையில், இதுவரை கட்டண நிர்ணயக் குழு எதுவும் அமைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    *விரைவில் கட்டண நிர்ணயக் குழு*
    சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகளில் கல்வி நிர்ணயம் செய்வதற்கான குழு அமைக்கப்பட உள்ளது.
    இதுகுறித்து உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியது: சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர்களிடம் வசூலிக்கப்பட வேண்டிய கல்விக் கட்டணத்தை நிர்ணயம் செய்வதற்கான குழுவை அமைப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன.
    இதுதொடர்பாக அதிகாரிகளுடன் இரண்டு முறை ஆலோசனை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. எனவே, விரைவில் கலை, அறிவியல் கல்லூரிகளுக்கும் விரைவில் கட்டண நிர்ணயக் குழு அமைக்கப்படும் என்றார் அவர்.

    No comments: