அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் இன்ஜினியரிங் படிப்பதற்கு ஆன்லைனில் பதிவு செய்தவற்கு நாளை கடைசி நாளாகும். அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன்கீழ் செயல்படும் அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் இன்ஜினியரிங் படிக்க அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் பதிவு மே 1ம் தேதி தொடங்கியது. ஆன்லைனில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து உரிய அவணங்களுடன் ஜூன் 3ம் தேதிக்குள் தபால் மூலமோ நேரிலோ அண்ணா பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சரி பார்க்கப்பட்டு ஜூன் 20ம் தேதி ரேண்டம் எண் வெளியிடப்பட உள்ளது. அதைதொடர்ந்து ஜூன் 22ம் தேதி இன்ஜினியரிங் படிக்க விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியாக உள்ளது. ஜூன் 24ம் தேதி சிறப்பு பிரிவு மாணவர்களுக்கும், ஜூன் 27ம் தேதி பொதுப்பிரிவு மாணவர்களுக்கும் கவுன்சலிங் தொடங்குகிறது.
No comments:
Post a Comment