Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, May 13, 2017

    வீடு தேடி சென்று கல்விக்கு கை கொடுத்த நாளிதழ் வாசகி

    கடந்த, 2016 டிசம்பர் 9, நாளிதழில் இதழில், சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் உள்ள சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி மாணவி, தனலட்சுமி யின் சாதனையைப் பாராட்டி, நாளிதழ் சார்பாக 1,000 ரூபாய் பரிசு வழங்கப்பட்டு, அவரைப் பற்றிய செய்தி வெளியானது. இச்செய்தியை படித்த, மதுரை வாசகி ஜானகி, அந்தப் பள்ளி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு பேசியதோடு, தன் மகன், கார்த்திகேயனுடன் அங்கு சென்று, தனலட்சுமியை சந்தித்து, அவரின் சாதனை மெடல்களை பார்வையிட்டார். மாணவி, தனலட்சுமியின் பெற்றோர் கூலித்தொழிலாளிகள் என்பதை அறிந்த ஜானகி, மாணவியின் விருப்பமான, ஐ.பி.எஸ்., படிப்பது வரையிலான கல்வித்தொகை முழுவதையும் தானே ஏற்றுக் கொள்வதாக உறுதி அளித்தார். 


                           உறுதி அளித்ததன் தொடர்ச்சியாக இன்று மதுரை அருகே உள்ள பறவை என்கிற ஊரிலிருந்து தேவகோட்டையில் உள்ள மாணவியின் குடிசை வீட்டிற்கே தேடிவந்து 9ம் வகுப்பு படிப்பதற்கான  ரூபாய் நான்காயிரம் பணத்தை கொடுத்தனர்.இந்த நிகழ்வு குறித்து மாணவி தனலெட்சுமியின் தாயார் மீனாள் கூறும்போது , மதுரையில் இருந்து எங்களது வீடு தேடி வந்து ஜானகி அம்மாள் எனது மகளின் படிப்புக்கு உதவி செய்வது எனக்கு மனிதர்களின் ,மீது அதிக நம்பிக்கையினை ஏற்படுத்தி உள்ளது.சொல்லி விட்டு சென்று விடாமல் இவ்வளவு தொலைவு வந்து அவர்கள் உதவி செய்வது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.கண்டிப்பாக எனது மகள் நல்ல நிலைமைக்கு வருவாள்.வீட்டு வேலை பார்த்துவரும் நான் எப்படி எனது மகளை படிக்க வைக்கப்போகிறேன் என்று தெரியாமல் தவித்தேன்.நன்றாக படிக்கும் எனது மகளுக்கு இப்பள்ளியின் மூலமாகவும், நாளிதழின் வாயிலாகவும் படிப்பு உதவி தொகை கிடைத்ததற்கு பள்ளி தலைமை ஆசிரியருக்கும்,ஆசிரியர்களுக்கும்,உதவி செய்த ஜானகி அம்மாளுக்கும் ,அவர்களது மகன் கார்த்திகேயன் அவர்களுக்கும் , இதழுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

                          மாணவி தனலெட்சுமி கூறும்போது : என்னால் நம்ப முடியவில்லை.எங்கள் பள்ளி தலைமை ஆசிரியர் இன்று காலை தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு , மதுரையில் இருந்து ஜானகி அம்மாள்எனது மேற்படிப்புக்கு உதவி செய்யநேரில் வருவதாக சொன்னார்.எனக்கு பெரிய ஆச்சிரியம்.  இதழ் வழியாக எனது திறமைகள் வெளிவந்தது.அதன் தொடர்ச்சியாக எனக்கு கிடைத்துள்ள இந்த உதவியை நான் நன்றாக பயன்படுத்தி கொண்டு எனது லட்சியமான IPS ஆவேன்.எனது தந்தை கல் உடைக்கும் வேலை பார்த்தும்,எனது தாயார் வீட்டு வேலை பார்த்தும் என்னை படிக்க வைக்க சிரமப்படும்போதும் எங்கள் பள்ளியின் வாயிலாக எனக்கு கிடைத்துள்ள இந்த உதவிக்கு நாளிதழ்க்கும்  ,பள்ளி தலைமை ஆசிரியர்க்கும்,ஜானகி அம்மாள் குடும்பத்துக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

                             ஜானகி அம்மாள்  கூறும்போது : நாங்கள் முன்பு வந்தபோதே மாணவி தனலெட்சுமியின் கல்விக்கு உதவி செய்வதாக தெரிவித்து உறுதி அளித்து இருந்தோம்.அதே போல் 9ம் வகுப்புக்கான படிப்பு உதவி தொகை ரூபாய் 4,000 கொடுத்துள்ளோம்.இந்த மாணவியின் குடும்ப சூழ்நிலையின் நிலை கருதி இந்த உதவியை செய்துள்ளோம்.மாணவியின் வீடு குடிசை வீடாக உள்ளது.இந்த மாணவி தேசிய திறன் வழி தேர்விலும் வெற்றி பெற்றுள்ளதாக அறிந்தோம்.மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.தொடர்ந்து மாணவியின் மேல்படிப்பு தொகை முழுவதையும் ஏற்று கொள்கிறோம். பல ஆண்டுகளாக, நாளிதழின் '  தீவிர வாசகி. அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்களின் சாதனைகளை, வெளி உலகிற்கு எடுத்துக்காட்ட முயற்சிக்கும், பள்ளி தலைமை ஆசிரியர், லெ.சொக்கலிங்கம் மற்றும் தனலட்சுமியின் சாதனையை வெளிக்கொண்டு வந்த,  இதழுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

    இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் கூறியதாவது : நேற்று இரவு ஜானகி அம்மையாரின் மகன் கார்த்திகேயன் என்னை தொடர்பு கொண்டு மாணவிக்கு உதவி தொகை வழங்க வருவதாக சொன்னார்கள்.பள்ளி விடுமுறை காலமாக இருப்பதால் மாணவியின் வீட்டுக்கே சென்று கல்வி உதவி தொகையை வழங்குவது என்று முடிவு செய்தோம்.அதன்படி மாணவியின் குடிசை வீட்டுக்கு சென்று அங்கு அவரது தாயாரிடம் கல்வி உதவி தொகை கொடுக்கப்பட்டது.சிலர் உதவி செய்வதாக சொல்லி விட்டு  அத்தோடு சென்று விடுவார்கள்.ஆனால் மதுரையிலிருந்து தேவகோட்டை தேடி வந்து உதவி செய்த ஜானகி அம்மாளுக்கும் ,கார்த்திகேயனுக்கும், இதழுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.இவ்வாறு பேசினார்.

    No comments: