Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, May 26, 2012

    ஜிப்மரில் 9 புதிய மருத்துவ சிறப்பு படிப்புகள் அறிமுகம்.

    புதுச்சேரி ஜிப்மரில், ஒன்பது புதிய மருத்துவ சிறப்பு படிப்புகள், இந்தாண்டு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாக, இயக்குனர் ரவிகுமார் கூறினார்.
    இது குறித்து அவர், நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ஜிப்மரில் எம்.பி.பி.எஸ்., இடங்கள், இந்தாண்டு, 75லிருந்து 145 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த அதிகரிப்பால், 20 இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்த புதுச்சேரிக்கு, தற்போது, 40 இடங்கள் கிடைத்துள்ளன. இதேபோல் முதுநிலை மருத்துவ படிப்பு இடங்கள், 88லிருந்து 124 ஆக உயர்த்தப்பட்டுள்ளன.

    டி.எம்., நெப்ரோலஜி, டி.எம்., மெடிக்கல் ஆங்காலஜி, எம்.சி.எச்., பிளாஸ்டிக் சர்ஜரி, எம்.சி.எச்., குழந்தை மருத்துவ அறுவை சிகிச்சை, இதயம் மற்றும் நரம்பு உணர்வு அகற்றியல், எம்.எஸ்.சி., எம்.எல்.டி., எம்.எஸ்.சி., மெடிக்கல் சைகாலஜி உட்பட, ஒன்பது புதிய மருத்துவ சிறப்பு படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
    படிப்பு கால ஆராய்ச்சி நிதியாக, 20011-12 ஆண்டில், இளநிலை மருத்துவ மாணவர்களுக்கு, 33.67 லட்சமும், முதுநிலை மருத்துவர்களுக்கு, 52.61 லட்சமும் ஒதுக்கப்பட்டது. இந்தாண்டு, இத்திட்டத்திற்கான தொகை, 3.25 கோடி ரூபாயாக ஒதுக்கிடப்பட்டுள்ளது.
    இந்திய மற்றும் வெளிநாடுகளில் உள்ள முன்னாள் மாணவர்களின் உதவியோடு, கல்வி, நோயாளிகளின் மருத்துவ சேவை, ஆராய்ச்சிகள் மேம்படுத்தப்படும். இவ்வாறு ரவிகுமார் கூறினார். டீன் ரெட்டி, மருத்துவ கண்காணிப்பாளர் தாஸ், டாக்டர்கள் அனந்த நாராயணன், பத்ரிநாத், மக்கள் தொடர்பு அதிகாரி மகேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.

    No comments: