Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, May 21, 2012

    கல்வி காக்கும் இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் பேரணி; கன்னியாகுமரி குலுங்கியது.

    இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் 5 வது அகில இந்திய மாநாடு கன்னியாகுமரி அஜீத்பாக் நகரில் (CSI ஆடிட்டோரியம்) மே மாதம் 17,18,19 ஆம் தேதிகளில் நடைபெற்றது.

    மாநாட்டு நிறைவு நாளான நேற்று (19.05.2012) பிற்பகல் 03.00 மணிக்கு கன்னியாகுமரி பேருந்து நிலையம் அருகில் இருந்து கல்வி காக்கும் பள்ளி ஆசிரியர்களின் பேரணி தொடங்கி செயின்ட் அந்தோணி மேல் நிலைப்பள்ளி மைதானத்தில் நிறைவு பெற்றது. தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் குமரேசன் தலைமையில் மாநில அமைப்பு செயலாளர் இசக்கியப்பன், மாநில துணைத் தலைவர்கள் வாசுகி, அருணகரி, மாநில இணைச் செயலாளர் பாஸி, கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் எட்வின் பிரகாஷ், அமைப்பு செயலாளர் திவாகரன் பிள்ளை, தலைமையிட செயலாளர் பால் செபாஸ்டின், துணை தலைவர் டெல்லஸ், முன்னாள் மாவட்ட தலைவர் சேம் பிரின்ஸ்குமார், நாகர்கோவில் கல்வி மாவட்ட செயலாளர் சசி, பொருளாளர் ஞான செல்வ திரவியம், துணை தலைவர் சிவகுமார், இணை செயலாளர் மதன்குமார், தக்கலை கல்வி மாவட்ட துணை தலைவர் ஆபிரகாம், குழித்துறை கல்வி மாவட்ட செயலாளர் ஹரிகுமார் மற்றும் தஇஆச உறுப்பினர்கள் பேரணியில் பங்கேற்றனர்.

    தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளரும், இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் தமிழ் மாநில அமைப்பாளரும், 5ஆம் அகில இந்திய மாநாட்டின் வரவேற்பு குழுச் செயலாளருமான முருக. செல்வராசன் தலைமையில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாநாட்டு வரவேற்புக் குழுவின் மூத்த துணைத்தலைவரும், தமிழ்நாடு சட்டமன்ற மேலவையின் முன்னாள் உறுப்பினருமான ஆ.மாயவன் வரவேற்புரை ஆற்றினார்.

    பொதுக்கூட்டத்தில் இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்தியத் தலைவர் அபிஜித் முகர்ஜி, பொதுச்செயலாளர் கே.இராஜேந்திரன், பொருளாளர் சி.என்.பார்த்தி ஆகியோர் 5 ஆம் அகில இந்திய மாநாட்டு முடிவுகளை விளக்கி உரையாற்றினர்.

    இந்திய தொழிற்சங்க மையத்தின் (CITU) அகில இந்தியத் தலைவர் ஏ.கே.பத்மநாபன், நாடாளுமன்ற உறுப்பினர் பி.கே.பிஜு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.வி.பெல்லார்மின், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.லீமாரோஸ், அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் அமைப்பாளர் எஸ்.இராமச்சந்திரன், மதுரை காமாராஜர் பல்கலைக்கழக ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர் மனோகரஜஸ்டிஸ் ஆகியோர் உரையாற்றினர்.

    பொதுக்கூட்ட முடிவில் மாநாட்டு வரவேற்பு குழு பொருளாளரும், இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய துணைச் செயலாளருமான கே.பூபாலன் நன்றி கூறினார்.

    பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் 20க்கு மேற்பட்ட சங்கங்களின் தலைவர்கள், 1000க்கு மேற்பட்;ட மாநாட்டு பிரதிநிதிகள் 10000க்கு மேற்பட்ட ஆசிரியர்கள் பஙகேற்றனர். பேரணியில் சீருடைகளிலும், கலை நிகழ்ச்சிகளுடனும் ஆசிரியர்கள் பங்கேற்றுள்ளனர்.

    No comments: