Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, May 17, 2012

    ஆசிரியர் தகுதித் தேர்வு : சமூக அறிவியல் வினா-விடை11.

    தமிழகத்தில் ஜுன் மாதம் நடைபெற உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வெழுத உள்ள ஆசிரியர்களுக்கு ஏற்கனவே குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறை வினாக்களை வழங்கியுள்ளோம். அந்த வகையில் தற்போது சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினா விடைகளை தயாரித்து இங்கு வழங்கியுள்ளோம். 
    1. சங்க காலத்தில்  தலைசிறந்து விளங்கிய சோழ மன்னர் - கரிகாலன்
    2. வேப்பம் பூ மாலையை அணிந்தவர்கள் - பாண்டியர்கள்
    3. நீர் வழி போக்குவரத்துக்கு உதவுவது - பரிசல்

    4. கடல் பயணம் செய்வோர் எளிதில் திசை அறிய உதவுவது - திசைக் காட்டும் கருவி
    5. பள்ளி ஒரு - குடும்பம்
    6. மதுரையில் கடைச் சங்கம் ஏற்படுத்தியவர் - இரண்டாம் நெடுஞ்செழியன்
    7. ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்று அழைக்கப்பட்டவர்  - இரண்டாம் நெடுஞ்செழியன்
    8. பாண்டியனின் துறைமுகம் - கொற்கை
    9. தலையாலங்கானத்துச் செகுவென்ற பாண்டிய நெடுஞ்செழியன் என்று அழைக்கப்பட்டவர் - இரண்டாம் நெடுஞ்செழியன்
    10. சங்க காலத்தில் தலைசிறந்து விளங்கிய சோழ மன்னன் - கரிகாலன்
    11. பொருநராற்றுப் படையை இயற்றியவர் - முடத்தாமக் கண்ணியர்
    12. இந்தியாவில் முதல் விண்வெளி வீராங்கனை - கல்பனா சாவ்லா
    13. முதன் முதலில் விண்வெளிக்கு மனிதனை அனுப்பிய நாடு - ரஷ்யா, ஆண்டு 1961
    14. சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தின் பெயர் - பிர்
    15. இந்தியா விண்வெளிக்கு அனுப்பிய முதல் செயற்கைகோள் - ஆரிய பட்டா
    16. இந்திய விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா பயணம் செய்த விண்வெளிக்கலம் - சோயூஸ் T2
    17. முதன் முதலில் விண்வெளிக்கு சென்ற மனிதர் - யூரி காசரின்
    18. மனிதன் முதன் முதலில் நிலவிற்குச் சென்ற ஆண்டு - 1969
    19. முதன் முதலில் நிலவில் காலடி வைத்த மனிதர் - நீல் ஆம்ஸ்ட்ராங்
    20. இந்தியா நிலாவிற்கு விண்வெளி கலத்தை அனுப்பிய ஆண்டு - 2008
    21. இந்தியா முதன் முதலில் நிலவிற்கு அனுப்பிய விண்வெளி கலத்தின் பெயர் - சந்திராயன் 1
    22. இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பயணம் செய்த விண்வெளிக் கலம் - கொலம்பியா
    23. கர்நாடக மாநிலம் கோலாரில் கிடைப்பது - தங்கம்
    24. இந்தியாவின் முதல் விண்வெளி வீரர் - ராகேஷ் சர்மா
    25. இந்திய விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா விண்வெளியில் பயணம் செய்த ஆண்டு - 1984
    26. ஆபரணங்கள் செய்யப் பயன்படுவது - தங்கம்
    27. கர்நாடக மாநிலம் கோலாரில் கிடைப்பது - தங்கம்
    28. கண்ணாடித் தொழிற்சாலையில் பயன்படுவது - மாங்கனீசு
    29. வரலாற்றின் உயிர்நாடி - காலம்
    30. இந்திய தேசியக் காங்கிரஸ் தொடங்கப்பட்ட வருடம் - 1885
    31. சமுதாய உணர்வை குழந்தைகளிடம் வளர்ப்பது - குடும்பம் - பள்ளி

    No comments: