Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, May 25, 2012

    டி.இ.டி., தேர்வில் யாருக்கு விலக்கு? ஆசிரியர் பலரும் குழப்பம்.

    டி.இ.டி., தேர்வில் இருந்து,  யார், யாருக்கு விலக்கு என்பது குறித்து, ஆசிரியர் தேர்வு வாரியம் தெளிவான விளக்கம் அளிக்காததால், நேற்று ஏராளமானோர் டி.ஆர்.பி., அலுவலகத்திற்கு படையெடுத்தனர்.
    ஆகஸ்ட் 23, 2010க்குப் பின் பணியில் சேர்ந்த, அனைத்து வகை பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர், டி.இ.டி., தேர்வை எழுத வேண்டும் என, டி.ஆர்.பி., ஆரம்பத்தில் தெரிவித்தது. அறிவிப்பு தற்போது, என்.சி.டி.இ., வழிகாட்டுதலின்படி, ஆகஸ்ட் 23, 2010க்கு முன், ஆசிரியர் நியமனம் தொடர்பான அறிக்கை மற்றும் இதர பணிகள் நடந்து, அதன்பின் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் டி.இ.டி., தேர்வை எழுத தேவையில்லை என, 22ம் தேதி, ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்தது.

    நாளிதழ்களில், மிகச்சிறிய அளவில், விளம்பரமாக இந்த அறிவிப்பு வெளியானது. பலருக்கு இது தெரியவில்லை; விளம்பரத்தை பார்த்த ஆசிரியர்களும் சரிவர புரியாமல், ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் விளக்கம் கேட்டபடி உள்ளனர். மேலும், இவ்வளவு பெரிய அறிவிப்பை, பெரிய அளவில் வெளியிடாதது ஏன் என்றும், ஆசிரியர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
    படையெடுப்பு இது தொடர்பாக விளக்கம் கேட்க, நேற்று ஏராளமானோர் டி.ஆர்.பி., அலுவலகத்திற்கு படையெடுத்தனர். அவர்களிடம், டி.ஆர்.பி., அலுவலர்கள் விளக்கிக் கூறினர். விலக்கு அளிக்கப்பட்ட ஆசிரியர் பெயர் பட்டியலை, இணையதளத்தில் டி.ஆர்.பி., வெளியிட வேண்டும்; சம்பந்தப்பட்ட நபர்களுக்கு, கடிதம் மூலம் தெரிவிக்கலாம் என்பது, விண்ணப்பதாரர்களின் கருத்தாக உள்ளது.
    தெளிவான விளக்கம் இது குறித்து, டி.ஆர்.பி., வட்டாரம் கூறியதாவது: அறிவிப்பில், எங்களது விளக்கத்தை தெளிவாகக் கூறியுள்ளோம்.
    ஆகஸ்ட் 23, 2010க்குப் பின் பணியில் சேர்ந்தவர்களாக இருந்தால், அவர்கள் பணி நியமனம் தொடர்பான வேலைகள், ஒரு ஆண்டுக்கு முன்பே துவங்கியிருக்கும். இப்படிப்பட்ட ஆசிரியர், டி.இ.டி., தேர்வை எழுத தேவையில்லை.
    மொத்தம், 6.50 லட்சம் பேரில், விலக்கு அளிக்கப்பட்டவரின் பெயர் பட்டியலை, தற்போது தேட முடியாது. 27ம் தேதி, முதுகலை ஆசிரியர் தேர்வு நடந்தபின், இது தொடர்பாக முழுமையான விளக்கம் தரப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    2 comments:

    Anonymous said...

    http://www.dailythanthi.com/article.asp?NewsID=733094&disdate=5/26/2012

    கைக்குழந்தையுடன் வந்த பெண் கதறல்
    ஆசிரியர் தகுதி தேர்வை யார் எழுதவேண்டும்
    தெளிவான தகவல் இல்லாததால் குழப்பம்


    சென்னை, மே.25-

    ஆசிரியர் தகுதி தேர்வை யார்? யார்? எழுதவேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெளிவான தகவலை அளிக்காததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தில் சரியான தகவல் கிடைக்காதால் கைக்குழந்தையுடன் வந்த ஒரு பெண் கதறி அழுதார்.

    ஆசிரியர் தகுதி தேர்வு

    பட்டதாரி ஆசிரியர்களும், இடைநிலை ஆசிரியர்களும் ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள்தான். இருப்பினும் அவர்கள் ஒரு பொதுத்தேர்வை (ஆசிரியர் தகுதி தேர்வை) எழுதி தங்களை தகுதி படுத்திக்கொள்ளவேண்டும் என்று தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் வரை முறைகளை வகுத்தது.

    இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரியம் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது.

    அதில் 2010-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 23-ந்தேதிக்கு பின்னர் வேலையில் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதி தேர்வை எழுதி தகுதி பெறவேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

    அறிவிப்பால் குழப்பம்

    இந்த நிலையில் ஆசிரியர் தேர்வு எழுத பணியில் இல்லாதவர்கள், பணியில் உள்ளவர்கள் என 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். ஒரு விண்ணப்பம் ரூ.500 வீதம் ரூ.32 கோடியே 50 லட்சம் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு வருமானம் கிடைத்துள்ளது. இந்த நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

    அதில் வேலையில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு அவர்களை ஆசிரியர்களாக தேர்வு செய்வதற்கான பணி 23-8-2010-ந்தேதிக்கு முன்பு தொடங்கியிருந்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதி தேர்வை எழுத தேவை இல்லை என்ற அர்த்தத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

    ஆனால் யார் யார் எழுதவேண்டும், யார் யார் எழுதவேண்டாம் என்ற விளக்கத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடவில்லை.

    இதனால் 2011-ம் வருடம் டிசம்பர் மாதம் நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் நாங்கள் ஆசிரியர் தகுதி தேர்வை எழுதவேண்டுமா, இல்லையா என்று குழப்பத்தில் உள்ளனர். இதுகுறித்து பட்டதாரி ஆசிரியர்கள் ஏராளமானவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கும், கல்வித்துறை அதிகாரிகளுக்கும், பத்திரிகை அலுவலகத்திற்கும் தொலைபேசியில் நாங்கள் ஆசிரியர் தகுதி தேர்வை எழுதவேண்டுமா இல்லையா என்று கேட்ட வண்ணம் உள்ளனர்.

    அழுத பெண்

    நேற்று ஆசிரியர் தேர்வு வாரியத்தில் விளக்கம் கேட்க ஏராளமான ஆசிரியர்கள் வந்திருந்தனர். அவர்கள் அங்குள்ள ஆசிரியர் தேர்வு வாரிய ஊழியர்களிடம் நாங்கள் ஆசிரியர் தகுதி தேர்வை எழுதவேண்டுமா, இல்லையா என்று கேட்டனர். அதற்கு அவர்கள் தெரியாது என்று பதில் அளித்தனர். அப்போது அந்த பதிலை கேட்டு அங்கு கைக்குழந்தையுடன் வந்திருந்த ஒரு பெண் பட்டதாரி ஆசிரியர் அழுதே விட்டார். அவர் கூறுகையில், காஞ்சீபுரத்தில் இருந்து கைக்குழந்தையுடன் வந்திருக்கிறேன். நான் 2011-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வேலையில் சேர்ந்தேன். நான் ஆசிரியர் தகுதி தேர்வை எழுத வேண்டுமா, இல்லையா என்ற விளக்கம் தெரியாமல் உள்ளேன் என்று கூறி தேம்பி தேம்பி அழுதார்.

    அதைத்தொடர்ந்து அங்கு சென்ற பத்திரிகையாளர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் சுர்ஜித் கே சவுத்ரியிடம் யார் யார் ஆசிரியர் தகுதி தேர்வை எழுதவேண்டும் என்று கேட்டதற்கு உங்கள் கேள்விக்கு பதில் எங்கள் விளம்பரத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. யார் யார் எழுதவேண்டும் என்று நான் சொல்லத்தேவையில்லை. அது என் வேலை இல்லை. ஆசிரியர்களை தேர்வு செய்வது தான் எனது பணி என்று தெரிவித்தார்.

    ஆசிரியர் தகுதி தேர்வை எழுதவேண்டுமா? வேண்டாமா? என்ற குழப்பத்தில் பலர் உள்ளனர். இதற்கிடையே தேர்வுக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளது.

    அமைச்சரிடம் புகார்செய்வோம்

    இதுபற்றி ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு வந்த பட்டதாரி ஆசிரியர்கள் கூறுகையில், ஆசிரியர் தேர்வு வாரியம் சரியான விளக்கத்தை உடனே செய்தியாக வெளியிடாவிட்டால் இந்த தகவலை அமைச்சர் சிவபதியை பார்த்து தெரிவிப்போம் என்றனர்.

    Anonymous said...

    மிக விரைவாக Update செய்யப்படும் வலைத்தளமாக தங்களது வலைத்தளம் அமைந்துள்ளது.மிக்க நன்றி... ஆசிரியர் தகுதித் தேர்வு விலக்கு சம்பந்தமாக டி.ஆர்.பி யில் கேட்டால் ஒழுங்கான விளக்கம் தராமல் 23-8-2010க்கு முன் ஆசிரியர் நியமனப் பணிகள் துவங்கியிருந்தால் அவர்கள் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் மற்றபடி எதுவும் தெரியாது எனவும் பொறுப்பில்லாமல் பதில் தருகின்றனர். 2011 டிசம்பரில் பணிநியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களை நியமனம் செய்யும் பணியை டி.ஆர்.பி எப்போது துவங்கியது என்று கேட்டால் ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதுதான் எனது பணி என யோசிக்காமல் பதில் சொல்கிறார்.அடுத்த வாரம் தேர்வு என்ற நிலையில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள டி.ஆர்.பி தலைவரின் போக்கு கண்டிக்கத்தக்கது.500 ரூ தேர்வுக்கட்டணமாக வசூலித்துவிட்டு இப்போது திருத்த அறிவிப்பை தெளிவில்லாமல் வெளியிட்டு விட்டதால் இப்போது படிக்க முடியாமல் தேர்வு எழுத வேண்டுமா?வேண்டாமா? என்ற குழப்பத்தில் 2011 செப்டம்பர் மற்றும் டிசம்பரில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர். தங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள் Please..