தொடக்கக் கல்வி இயக்கத்தின் கீழ் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் கடந்த கல்வியாண்டில் தோற்றுவிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படாமல் நேரடி நியமனம் செய்யப்படும் என்ற உத்தரவை அடுத்த சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றத்தின் கிளையில் பல்வேறு வழக்குகள் பதியப்பட்டு தற்போது 38 உயர்நீதிமன்ற உத்தரவுகளுக்கு அரசிடம் தெளிவுரை கேட்டு இருப்பதாகவும் அரசின் தெளிவுரை பெறப்பட்ட உடன், நீதிமன்ற உத்தரவை அமுல்படுத்துவதா அல்லது மேல்முறையீடு செய்வதா என்று அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவுகள் மேற்கொள்ளப்படும் எனவும் தொடக்கக் கல்வி துறையை சார்ந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் சென்னையில் சமீபத்தில் நடந்த தொடக்கக் கல்வி இயக்குநர் ஆய்வு கூட்டத்தில் நீதிமன்ற உத்தரவு வழங்கப்பட்ட வழக்குகள் பொறுத்தவரை " PASS ORDER ON MERITS " என்று இருக்கும் நிலையில் அரசாணையின் படி ஆணை வழங்க வேண்டும் என்றும், அரசாணையின் படி நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த முடியாத நிலையிருப்பின், முறையாக முறையீடு செய்தல் வேண்டும் எனவும் அக்கூட்டத்தில் உத்தரவு பிறபிக்கப்பட்டதாக கல்வித்துறையை சார்ந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

1 comment:
10+D.T.Ed +degree+B.Ed is eligible for promotionjudgement was given .But Edu Dept did not give promotion What abut the above judgement.
Post a Comment