தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான மெக்சிகோவின் யுகாடன் தீபகற்ப பகுதி குகையில் இருந்து 13 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இளம்பெண்ணின் கடைவாய் பல் மற்றும் விலா எலும்பின் சில பகுதிகள் கிடைத்துள்ளன.
இதுகுறித்து தொல்லியல் துறை ஆய்வாளர் பிலர் லூனா கூறியதாவது: கடைவாய்பல் மற்றும் விலா எலும்பின் சில பகுதிகள் 13 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இளம்பெண்ணின் எலும்புக்கூடில் சிதறியவையாக இருக்கலாம். அந்தப் பெண் இப்பகுதியை கடந்து சென்றபோது தவறி குகையில் விழுந்து இறந்திருக்கக்கூடும். இந்த எலும்புக்கூடுக்கு "நையா" என்று பெயரிடப்பட்டுள்ளது.
கடந்த 2007ல் இந்த குகையில் இருந்து கண்டெடுக்கப்பட்ட எலும்புகளில் இருந்து இந்தப் பெண்ணின் எலும்புக்கூட்டை பிரித்தெடுக்கும் முயற்சியை துவங்கியுள்ளோம். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆசியாவில் இருந்து அமெரிக்காவிற்கு பாலம் அமைத்து, அதன் வழியாக மக்கள் குடியேறியதற்கு இந்த எலும்புக்கூடு ஆதாரமாக உள்ளது. இவ்வாறு லூனா கூறியுள்ளார்.
No comments:
Post a Comment