பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியோர் எண்ணிக்கை, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 30 ஆயிரம் சரிந்துள்ளது. இதற்கு, படிப்பை பாதியில் கைவிடுவோர் காரணமாக இருக்கலாம் என, தெரிகிறது.
ஒவ்வொரு ஆண்டும் பொதுத் தேர்வு எழுதுவோர் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. பிளஸ் 2 தேர்வை பொறுத்தவரை, கடந்த 2012ல் 7.56 லட்சம் மாணவர்கள், 2013ல் 7.99 லட்சம் மாணவர்கள், 2014ல் 8.21 லட்சம் மாணவர்கள், பொதுத் தேர்வை எழுதினர். ஒவ்வொரு ஆண்டிலும், மாணவர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் இந்த ஆண்டு எண்ணிக்கை சரிந்துள்ளது.
பள்ளிகளில் படித்து 2012ல் 10.50 லட்சம் பேரும், 2013ல் 10.51 லட்சம் பேரும் தேர்வு எழுதினர். வெறும் 1,000 பேர் மட்டுமே கடந்த ஆண்டு கூடுதலாக எழுதினர். இந்த ஆண்டு 10.21 லட்சம் மாணவர்கள் தான் தேர்வை எழுதினர். இது, கடந்த ஆண்டை விட 30 ஆயிரம் பேர் குறைவு. ஒன்பது மற்றும் 10ம் வகுப்பில் படிப்பை பாதியில் கைவிடும் மாணவர் எண்ணிக்கை, இந்த சரிவுக்கு காரணமாக இருக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment