Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, May 25, 2014

    அரசுப் பள்ளிகளில் 23 ஆயிரம் மாணவர்கள் 450-க்கு மேல் மதிப்பெண்

    பத்தாம் வகுப்புத் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் 23,445 பேர் 500-க்கு 450 மதிப்பெண்ணுக்கும் (90 சதவீதம்) பெற்றுள்ளதாக பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன் கூறினார்.

    தமிழகம் முழுவதும் 88,840 மாணவர்கள் 400 மதிப்பெண்ணுக்கும் அதிகமாக பெற்றுள்ளனர். அதேபோல், முழுத் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு 482 பள்ளிகளில் நூறு சதவீத தேர்ச்சி இருந்தது. இந்த ஆண்டு 887 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியைப் பெற்றுள்ளன.

    அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் விவரம்:

    401 - 410 மதிப்பெண் வரை 14,347

    411 - 420 மதிப்பெண் வரை 13,847


    421 - 430 மதிப்பெண் வரை 12,705

    431 - 440 மதிப்பெண் வரை 12,229

    441 - 450 மதிப்பெண் வரை 11,267

    451 - 460 மதிப்பெண் வரை 9,666

    461 - 470 மதிப்பெண் வரை 7,658

    471 - 480 மதிப்பெண் வரை 4,865

    481 - 490 மதிப்பெண் வரை 2,017

    491 - 500 மதிப்பெண் வரை 239

    மொத்தம் 88,840

    அரசுப் பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுத்துள்ளது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன் மேலும் கூறியது:

    இந்த ஆண்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டன. கற்றலில் குறைபாடு உள்ளவர்களுக்கு வழிகாட்டி புத்தகங்கள் தயாரித்து வழங்கப்பட்டன.

    அதேபோல், மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறும் வகையில் அரசுப் பள்ளிகளில் உள்ள ஒவ்வொரு பாட ஆசிரியர்களுக்கும் மதிப்பெண்ணை அதிகரிப்பது தொடர்பாகவும் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

    இந்தக் காரணங்களால் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் 90 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளதோடு, அரசுப் பள்ளிகளில் முழுத் தேர்ச்சியும் இந்த ஆண்டு அதிகரித்துள்ளது என்றார் அவர்.

    1 comment:

    VU2WDP said...

    எத்தனை ஆசியர்களுக்கு தெரியும் 10ம் வகுப்பு முடித்தவுடன் பாலிடெக்னிகில் வணிகவியல் பாடம் உள்ளது என்பது? மிகமிக அருமையான பயனுள்ள 3 வருட படிப்பு பின் கல்லூரியில் நேரடியாக 2ம் ஆண்டு B.Com., சேரலாம். அனைவருக்கும் பகிருங்கள் .