பரமத்தி
வட்டாரத்தில் நடைபெற்ற தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள்
கூட்டணியின் செயற்குழுக் கூட்டத்தில்,
தொடக்கக்
கல்வி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வை
உடனடியாக
நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.
தமிழ்நாடு
ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியின்
செயற்குழுக் கூட்டம் பரமத்தி ஊராட்சி
ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு அதன் வட்டாரத் தலைவர்
சின்னுசாமி தலைமை தாங்கினார்.
மாவட்டச்
செயலாளர் முருகசெல்வராஜ் , பொருளாளர் கலைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில்
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
2014-2015-ஆம்
ஆண்டுக்கான தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு இடமாறுதல்
கலந்தாய்வை உடனடியாக நடத்திடும் வகையில், தொடக்கக் கல்வி இயக்குநர் மாவட்டத்
தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட
வேண்டும். பரமத்தி வட்டாரத்தில் பணிபுரியும்
15-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு 2013, ஜூலை மாதத்துக்கான அகவிலைப்படி
நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்கிட வேண்டும் என்பது
உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் அந்தக் கூட்டணியின் வட்டாரச்
செயலாளர் சேகர் , மாவட்ட முன்னாள்
செயலாளர் மாதேஷ், ஆசிரிய , ஆசிரியைகள்
கலந்து கொண்டனர். முடிவில், மாவட்டப் பொதுக்குழு உறுப்பினர் சாந்தி நன்றி கூறினார்.
2 comments:
councelling nu joke solringa . . .
Counselling may be done regularly before commencement of schools and due advance notice to be given to the teachers so that they can make use of the opportuinity.
Post a Comment