Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, May 26, 2014

    எம்.பி.பி.எஸ்: ஜூன் 18-இல் முதல் கட்ட கலந்தாய்வு

    தமிழகத்தில் நடப்புக் கல்வி ஆண்டில் (2014-15) எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க ஜூன் 18-ஆம் தேதியிலிருந்து முதல் கட்ட கலந்தாய்வை நடத்த மருத்துவக் கல்வி தேர்வுக் குழு திட்டமிட்டுள்ளது.


    இதுவரை 27,966 விண்ணப்பங்கள்: எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்புகளில் சேர விண்ணப்ப விநியோகம் கடந்த புதன்கிழமை (மே 14) தொடங்கியது. இதுவரை மொத்தம் 27,966 மாணவர்கள் விண்ணப்பங்களைப் பெற்றுள்ளனர். விண்ணப்ப விநியோகம் ஞாயிற்றுக்கிழமை (மே 25) கிடையாது.

    ஜூன் 2 கடைசி: விண்ணப்பங்களைப் பெற மே 30-ஆம் தேதி கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கு வந்து சேர கடைசி நாள் ஜூன் 2-ஆம் தேதியாகும். இதுவரை 2,500-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கு வந்து சேர்ந்துள்ளன.

    ஜூன் 12-இல் தரவரிசைப் பட்டியல்: எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்து வரும் மாணவர்களில் பலர் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பித்துள்ளனர். மறு மதிப்பீட்டுக்குப் பிறகு மாணவர்கள் பெற்ற மதிப்பெண்ணை ஜூன் 10-ஆம் தேதிக்குள் அளிப்பதாக மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவிடம் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாணவர்களின் மறு மதிப்பீடு மதிப்பெண்கள் ஜூன் 10-ஆம் தேதிக்குள் கிடைத்து விட்டால், ஜூன் 12-ஆம் தேதி எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். தரவரிசைப் பட்டியலை வெளியிட மருத்துவக் கல்வி தேர்வுக் குழு முடிவு செய்துள்ளது.

    No comments: