ஆசிரியர்
பயிற்சி விண்ணப்பம் வழங்குவதற்கான கால அவகாசம், ஜூன்,
9ம் தேதி வரை, நீட்டிக்கப்பட்டு
உள்ளது. கடந்த, 14ம் தேதி முதல்,
விண்ணப்பம் வழங்கப்பட்டு வருகிறது. விண்ணப்பம் பெறவும், பூர்த்தி
செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும், ஜூன், 2ம் தேதி,
கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், வரும், 9ம் தேதி
வரை, விண்ணப்பம் வழங்கப்படும் என, தமிழக அரசு
அறிவித்துள்ளது. இது குறித்து, ஆசிரியர்
கல்வி ஆராய்ச்சி, பயிற்சி இயக்குனர், கண்ணப்பன்
கூறுகையில், ''இதுவரை, 4,800 விண்ணப்பங்கள், விற்பனையாகி உள்ளன. இதில், 2,300 விண்ணப்பங்கள்,
பூர்த்தி செய்யப்பட்ட நிலையில் பெறப்பட்டுள்ளன,'' என்றார்.
No comments:
Post a Comment