தமிழகத்தில் பிளஸ் 2 விடைத்தாள் நகல், மறு கூட்டல் கேட்டு விண்ணப்பித்த மாணவர்களுக்கு மே 27 முதல் வழங்க தேர்வுத்துறை ஏற்பாடு செய்து வருகிறது.
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9 ல் வெளியிடப்பட்டது. இதில் விடைத்தாள் நகல் கேட்டும், மறு கூட்டல் கேட்டும் மாணவர்கள் தேர்வுத்துறைக்கு விண்ணப்பம் செய்திருந்தனர். இதில் விடைத்தாள் நகல் கேட்டு 87 ஆயிரம் பேரும் மறு கூட்டல் கேட்டு 4 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.
இந்த பணிகளுக்காக பணியாளர் தொகுதி இணை இயக்குனர் கருப்பசாமி தலைமையிலும், மதுரை முதன்மை கல்வி அதிகாரி அமுதாராணி கண்காணிப்பில், 200 பணியாளர்கள் ஈடுபட்டனர். இவர்கள் 95 சதவீத பணிகள் நிறவு செய்துள்ளனர். இந்நிலையில் மாணவர்களுக்கு விடைத்தாள் நகல்களை மே 27 முதல் வழங்க தேர்வுத்துறை ஏற்பாடுகளை முழு வீச்சில் செய்து வருகிறது.
மறு கூட்டல் பணிகளும் நிறைவடையும் நிலையில் உள்ளது. விரைவில் பணிகள் முடித்து மாணவர்களுக்கு மே 27 முதல் வழங்கப்படும், என தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment