Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, May 27, 2014

    உபரி என்ற பெயரில் பந்தாட திட்டம்? கலக்கத்தில் ஆசிரியர்கள்

    தமிழகத்தில் செயல்படும் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களின் பட்டியல் தலைமை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இடமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு முன்பு உபரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடத்தப்படுமோ என்ற கலக்கம் ஆசிரியர்கள் மத்தியில் வலுத்துள்ளது.

    ஒவ்வொரு, ஆண்டும் மே இறுதியில் தொடக்க, நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களுக்கும் பொது இடமாறுதல் கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்பட்டு, ஜூன் மாதம் புதிய பள்ளிகளில் பணியல் சேர்வது வழக்கம். ஆனால், இக்கல்வியாண்டிற்கான கலந்தாய்வு குறித்து எவ்வித தகவல்களும் இதுவரை வெளியிடப்படவில்லை.
    இந்நிலையில், அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 2013 செப். 1ல் பள்ளிகளின் மொத்த மாணவர்கள் எண்ணிக்கையின் படி உபரியாக உள்ள இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் இறுதிப் பட்டியல் தயார் செய்யப்பட்டு, சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 1:35 என்ற விகிதாசாரத்தின் அடிப்படையில் உபரி ஆசிரியர்கள் கணக்கிடப்பட்டுள்ளனர்.
    உபரி ஆசிரியர்கள் பணி நிரவல் கலந்தாய்வு என்பது ஒவ்வொரு பள்ளியிலும் பாடவாரியாக கூடுதலாக உள்ள ஆசிரியர்கள் கணக்கிடப்பட்டு, ஒன்றியம் விட்டு ஒன்றியம், மாவட்டம் விட்டு மாவட்டம் மாற்றப்படுவர். 99 சதவீத ஆசிரியர்களுக்கு, இக்கலந்தாய்வின்படி கட்டாய மாறுதல் வழங்கப்படுகிறது.
    இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு வைத்த பின்பே, உபரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு நடத்தப்படவேண்டும் என்ற கோரிக்கை ஆசிரியர்கள் மத்தியில் வலுத்துள்ளது. இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படாமல், உபரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு நடத்துவதற்கு ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது.
    மேலும், ஆசிரியர் தகுதித் தேர்வின் வாயிலாக, 12 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளதாக அறிவித்து விட்டு, உபரி ஆசிரியர்கள் கணக்கிடுவது முரண்பாடுகளுடன் உள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
    தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் சாமி சத்தியமூர்த்தி கூறுகையில், "இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடந்த பின், பள்ளிகளில் பல இடங்கள் காலியாகும். அதன்பின், ஒவ்வொரு பள்ளியிலும் உபரி ஆசிரியர்கள் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும். அதை விடுத்து உபரி என்ற பெயரில், பிற மாவட்டங்களுக்கும், ஒன்றியங்களுக்கும் ஆசிரியர்களை பந்தாடுவது ஏற்புடையதல்ல.
    மேலும், 2013 ஆக. 1ன் படி உபரி ஆசிரியர்கள் பட்டியல் கணக்கிட்டுள்ளனர். அதை விடுத்து, இடமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு நடத்திய பின் 2014 ஆக. 1ன் படி உபரி ஆசிரியர் பட்டியல் தயார் செய்தால், ஆசிரியர்களுக்கு சிரமங்களோ, கலந்தாய்வில் முறைகேடுகளோ இருக்காது" என்றார்.

    1 comment:

    Anonymous said...

    sangan solrathu nadakathu pa. govt solrathu than. athum sabitha madam solrathu than pa.sec madam trs azhutha than santhosapaduvanga....so muthalla diployment. next transfer councelling