சிதம்பரம் அருகே வறுமை காரணமாக குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட மாணவி 10ம் வகுப்பு தேர்வில் 379 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த கவரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் அன்னலட்சுமி, 43. இவரது கணவர் ஆறு ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். கூலி வேலை செய்து தன் மகள் பர்வதவர்த்தினி, 17; மகன் கபிலன், 14; ஆகியோரை காப்பாற்றி வந்தார். கவரப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில், பர்வதவர்த்தினி, 10ம் வகுப்பு தேர்வு எழுதியிருந்தார்.
இதற்கிடையே, உடல் நிலை பாதிக்கப்பட்ட அன்னலட்சுமி, சிகிச்சை செய்து கொள்ள பணம் இல்லாததாலும், வேலைக்கு செல்லாததால் குடும்ப கஷ்டத்திலும், வாழ்க்கையில் வெறுப்படைந்தார். தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்து, 21ம் தேதி இரவு மகள், மகனுடன் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து மூன்று பேரும் தற்கொலை செய்துகொண்டனர்.
இந்நிலையில், நேற்று வெளியான பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில் தற்கொலை செய்துகொண்ட பர்வதவர்த்தினி 379 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தார்.
1 comment:
ippadi patta nikazvu inimelavathu nadakkamal irukka andai veetaar aavana seiya vendum... thannal help seiya iyalavittalum veru siru muyarchigal seiyalam... kanneerudan.... may her soul rest in peace....
Post a Comment