எஸ்எஸ்எல்சி தேர்வில் 887 அரசுப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
பிளஸ் 2 மற்றும் எஸ்எஸ்எல்சி தேர்வுகளில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளும் சாதனை புரிந்து வருகின்றன. இந்த ஆண்டு எஸ்எஸ்எல்சி தேர்வில் 887 அரசுப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. கடந்த ஆண்டு 482 அரசுப் பள்ளிகள் மட்டுமே 100 சதவீத தேர்ச்சி அடைந்திருந்தன.
அரசுப் பள்ளிகளில் படித்த மாணவ, மாணவிகள் 88,840 பேர் 400-க்கு மேலும், 24 ஆயிரம் பேர் 450-க்கு மேலும், 2,039 பேர் 480-க்கு மேலும், 239 பேர் 490-க்கு மேலும் மதிப்பெண் பெற்று சாதனை புரிந்துள்ளதாக பள்ளிக்கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்தார்.
எஸ்எஸ்எல்சி தேர்வில் 500-க்கு 499 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதல் இடத்தைப் பிடித்த 19 பேரில் திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி பத்தமடை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி டி.என்.பாஹீரா பானுவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. அரசுப் பள்ளிகளில் படித்த மாணவ, மாணவிகளில் சராசரியாக 85.87 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
No comments:
Post a Comment