பள்ளிகளில்
சேரும் மாணவர்களிடம், கட்டணம் வசூலித்தால், கடும்
நடவடிக்கை எடுக்கப்படும், என, மாவட்ட முதன்மை
கல்வி அலுவலர்
அய்யண்ணன்,
கடும் எச்சரிக்கை விடுத்தார்.
கடந்த கல்வியாண்டில், எஸ்.எஸ்.எல்.ஸி., மற்றும் ப்ளஸ்
2 தேர்வில், ஈரோடு மாவட்டம், மாநில
அளவில் தேர்ச்சி சதவீதத்தில் முதலிடம் பெற்றது. இதனால், அனைத்து அரசு
மற்றும் நிதியுதவி பெறும் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான
பாராட்டு விழா, ஈரோடு, அரசு
மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
முதன்மை
கல்வி அலுவலர் அய்யண்ணன் பேசியதாவது:
தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களின் ஒத்துழைப்பால், ஈரோடு மா வட்டம்,
எஸ்.எஸ்.எல்.ஸி.,
மற்றும் ப்ளஸ் 2 தேர்வில், தேர்ச்சி
விகிதத்தில், மாநில அளவில் முதலிடத்தை
பெற்று, சாதனை படைத்தீர்கள். இந்த
பாராட்டையும், பரிசையும் தொடர்ந்து தக்க வைப்பதும், மற்றவர்களுக்கு
விட்டுக் கொடுப்பதும், தலைமையாசிரியர்கள் கைகளில் தான் உள்ளது.
ஜூன், இரண்டாம் தேதி பள்ளி துவங்குகிறது.
அன்றைய தினம், மாணவர்களுக்கு ஒரு
செட் யூனிஃபார்ம், நோட்டு, புத்தகங்கள் கண்டிப்பாக
வழங்க வேண்டும், என, அரசு உத்தரவிட்டுள்ளது.
அதுபற்றி சந்தேகம் இருந்தால், தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.
பள்ளி திறக்கும்போது, வகுப்பறைகள், காம்பவுண்ட் சுவர், கழிவறை, பெஞ்ச்,
டேபிள் அனைத்தும், சுத்தமாக இருக்க வேண்டும். புதர்
மண்டியோ, குப்பை கூளமாகவோ இருக்கக்கூடாது.
மாணவர்கள், பள்ளிக்கு வந்த பின்பு, தூய்மைப்பணிகளை
செய்யக்கூடாது. முன்கூட்டியே, செய்து முடிக்க வேண்டும்.
சென்னையில் இருந்து ஆய்வு அலுவலர்
தர்மராஜேந்திரன், பள்ளிகளின் சுகாதாரம் குறித்து, ஆய்வு செய்வதற்காக வருகை
புரிகிறார்.
எஸ்.எஸ்.எல்.ஸி.,
தேர்வு முடிவுகளை பொரு த்தவரை, உயர்நிலைப்பள்ளிகளை
காட்டிலும், மேல்நிலைப்பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் குறைவாகவே இருக்கிறது.
ப்ளஸ் 2, எஸ்.எஸ்.எல்.ஸி,க்கு தனித்தனி
ஆசிரியர்கள் இருக்கும்போது, தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது. அடுத்த
முறை, அதிக தேர்ச்சிக்கு முயற்சிக்க
வேண்டும்.
பள்ளிகளில்,
மாணவர்களின் சேர்க்கையின்போது, கட்டணம் வசூலிப்பதாக புகார்கள்
வருகின்றன. அட்மிஷன் துவக்கத்தில், நுகர்வோர் குழு மூலம், கண்காணிக்கப்படுவதால்,
தகவல்கள் வருகிறது. கட்டணம் வசூலிப்பதாக புகார்
வரும் பள்ளியின் மீது, கடும் நடவடிக்கை
எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
4 comments:
கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது தெரியவில்லையோ ? .குறிப்பாக B.E , M.B.B.S ,B.Ed அரசு நிர்ணயத்த கட்டணம் விட , பல மடங்கு இருக்கிறதே ? .கல்லூரிகள் சில பினாமிகள் பெயரில் உள்ளது , அதுவும் தெரியவில்லையோ ?
muthalil CEO pallikalil panam vasul pannuvathai nirutha sollunga. kurippaga trichy CEO .
CEO KU ELLAM THERIYUM AVARUKKU COVER POITTA ETHAIYUM KANDUKKA MATTAR
CEO DEO AEEO ELLARUM SEMAIYA KETKURANGA ATHANALA NUSERY KOLLAY ADIKKRANGA
Post a Comment