Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, May 29, 2014

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தீவிர மாணவர் சேர்க்கை மற்றும் கல்வி விழிப்புணர்வு முகாம் எங்கள் பிள்ளைகளையும்கலெக்டருக்கு படிக்க வைப்போம் நாயக்கர் சமுதாய தலைவர் சவால்

    தேவகோட்டை -மே- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி சார்பில் மாணவர் சேர்க்கை மற்றும்

    கல்வி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள்   தங்களது பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க வேண்டுமென்ற முனைப்புடன் தற்போதைய கோடை விடுமுறை நாள்களில் கூட கிராமம் கிராமமாக ஆசிரியர்கள், மாணவர்களை சேர்க்க சுற்றி வருவதை காண முடிகிறது. இவர்கள் மாணவர்களின் பெற்றோர்களைச் சந்தித்து அவர்களது குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கும் மனப்பான்மையை மாற்றி, கிராமத்திலுள்ள அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

                                 இதன் தொடர்ச்சியாகசிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களும் மாணவார்களை சேர்ப்பதில் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.   தேவகோட்டை இறகுசேரிப்  பகுதியில் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினர் வசித்து வருகின்றனர்.கல்வி பயில்தல்,பெண் கல்வியின் அவசியம் குறித்து இன்றைய சூழ்நிலையில் அறிந்திராத இக் குடும்பத்தினருக்கு பள்ளி மாணவிகள் தங்களின் தனிதிறமையினை வெளிப்படுத்தி கல்வியின் அவசியம் குறித்து விளக்கப்பட்டது.இறகுசேரிப் பகுதிக்கு தலைமையாசிரியர் சொக்கலிங்கம் தலைமையில் ஆசிரியர்கள் ,ஆசிரியைகள்,மாணவ மாணவிகள் புடைசூழ சென்றனர்.பள்ளியில் இருந்து அனைவரும் வருவதறிந்த தொட்டிய நாயக்கர் சமூகத்தினர் உற்சாக மிகுதியில் தடபுடலாக ஏற்பாடுகள் செய்திருந்தனர்.அந்தபகுதியே திருவிழாக்கோலம் பூண்ட சமுதாய சங்கத்தலைவர் பாண்டியன் தலைமையேற்று அனைவரையும் வரவேற்றார்.தலைமையாசிரியர் சொக்கலிங்கம் பள்ளியின் செயல்பாடுகள்,கல்வியின் அவசியம் குறித்து விளக்கினார்.மாணவி கீர்த்தியா ஆங்கிலத்தில் பேசி அசத்தினார்.
                                        ஆண் படித்தால் அந்தப் படிப்பு அவனது குடும்பத்திற்கு மட்டுமே பயன்படும்.ஆனால் பெண்கல்வி கற்றால் உலகத்திற்கே பயன்படும் என்பதை பெண்கல்வியின் அவசியத்தை நாடகம் மூலம் எடுத்துக் காட்டினர்.மாணவி சொர்ணாம்பிகா காட்சிகளை விளக்க மாணவி ராஜலெட்சுமி,சிநேகப்பிரியா,நவீன்குமார்,வல்லரசு ஆகியோர் அருமையாக நடித்துக் கட்டினர். பாரதிதாசனின் பெண் கல்வி என்ற பாடலை மாணவிகள் முககனி,முத்தழகி மற்றும் பரமேஸ்வரி பாடினார்.
                                         கல்வியின் அவசியத்தை உணர்த்தும் வகையில் "கல்விக்கண் திறந்தவர்"என்ற தலைப்பில் நாடகத்தை மாணவன் சன்முகப்ரகாஷ் தொகுத்தளிக்க மாணவிகள் தேன்மொழி,சோலையம்மாள் ,திவ்யா மாணவர்கள் வசந்தகுமார் ,வல்லரசு நடித்துக் காட்டினர் .மாணவர் சேர்க்கையை வலிவுறுத்தி கண்ணதாசனும் ,வசந்தகுமாரும் ஆங்கிலத்தில் உரையாடல் நடத்தினர்.கிராமிய பாடல்களை சொர்ணாம்பிகா , சமயபுரத்தாள் பாட,பூவதி,சுமித்ரா,பூஜா,முகிலா,கிருஸ்ணவேணி ,சிந்து,புனிதா மற்றும் அபிநயா ஆகியோர் ஒயிலாட்டம் ஆடினார்கள் .

                                              ஆசிரியைகள் முத்துமீனாள்,முத்துலெட்சுமி ஆகியோர் பள்ளியில் குழந்தைகளை சேர்க்குமாறு வலிவுருத்தி பேசினர். சமுதாயத்தலைவர் பாண்டியன் பேசுகையில்,எங்கள் சமுதாய மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திக்கொடுத்த அனைவர்க்கும் நன்றி தெரிவித்துக்  கொள்கிறோம் .சேர்மன் மாணிக்க வாசகம் பள்ளி மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு நாடகங்களால் எங்கள் பிள்ளைகளயும் கல்வி கற்க வைத்து கலெக்டர் போன்ற பெரிய பதவிகள் வகித்திட எங்களை நாங்கள் தயார் செய்து கொள்வது உறுதி.என்று பேசினார்.மாணவி திவ்யா நன்றி கூறினார்.நிகழ்ச்சியில் சமுதாய முன்னாள் தலைவர் காளியப்பன்,கோட்டைச்சாமி,முனியாண்டி,மற்றும் செஞ்சிக்குமார்    கெளரவிக்கபட்டனர் .


    9786113160

    No comments: