ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் அக்டோபர் 3-க்கு பதிலாக அக்டோபர் 14ந் தேதி நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை உயர்நீதிமன்றத்தில் புதியதாக இந்த வருடம் முடித்தவர்களையும் சேர்த்து
தகுதித் தேர்வு நடத்த வேண்டும் என உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கில் ஆசிரியர்த் தேர்வு வாரிய தலைவர் இவ்வாறு பதிலளித்துள்ளார் எனவும், புதியதாக விண்ணப்பம் செய்ய உள்ளவர்கள் வருகிற செபடம்பர் 24 முதல் 28 வரை விண்ணபிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment