Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, September 27, 2012

    பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இலவச சிம்கார்டு

    கோவை கல்வி மாவட்டத்தில் பணியாற்றும் 240 பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, மொபைல்போன் சிம்கார்டு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பள்ளி கல்வித்துறையின் அனைத்து தகவல்களும் உடனடியாக, தலைமை ஆசிரியர்களை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    பள்ளி கல்வித்துறையின் தகவல்கள், தலைமை ஆசிரியர்களை சென்றடைவதில், பல்வேறு சிக்கல்கள் தற்போது உள்ளன. இப்பிரச்னைக்கு தீர்வு காணும் விதத்தில், பள்ளி கல்வித்துறை சார்பில், தலைமையாசிரியர்களுக்கு "சி.யு.ஜி&' திட்ட வசதி கொண்ட, மொபைல்போன் "சிம்கார்டு&' இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

    கோவை மற்றும் பொள்ளாச்சியில், மொத்தம் 240 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிம்கார்டு வழங்கப்பட்டுள்ளது. கல்வி அலுவலர்கள் கூறுகையில், பள்ளி கல்வித்துறையின் அனைத்து தகவல்களும் உடனடியாக, தலைமை ஆசிரியர்களை சென்றடைய உதவும்.

    பள்ளி கல்வித்துறை அல்லாத, மற்ற அழைப்புகளுக்கான விதிக்கப்படும் கட்டணத்தை, சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் செலுத்த நேரிடும். மொபைல் போன்களை, சுவிட்ச்- ஆப் செய்யக் கூடாது என, உத்தரவிடப்பட்டுள்ளது என்றனர்.

    No comments: