மின் வாரியத்தில், 50 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளன. இதனால், பணிகள் பாதிக்கப்பட்டதை அடுத்து, உதவி பொறியாளர், கணக்கீட்டாளர் உட்பட, 1,650 பணியிடங்களை நிரப்ப, மின் வாரியம் முடிவு செய்துள்ளது. அதன்படி, உதவி பொறியாளர் - எலக்ட்ரிகல், 300; மெக்கானிக்கல், 25; சிவில், 50 என மொத்தம், 375 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை, மின் வாரியம் வெளியிட்டு உள்ளது.
இதுகுறித்து, அதிகாரி ஒருவர் கூறுகையில், 'உதவி பொறியாளர் தேர்வின் வழிமுறை, விண்ணப்பிக்கும் முறை, கட்டணம் உள்ளிட்ட விவரங்களை, மின் வாரிய இணையதளத்தில் அறியலாம். மற்ற பதவிகளுக்கான தேர்வு அறிவிப்பு, விரைவில் வெளியிடப்படும்' என்றார்.
தேர்வு விவரம்
விண்ணப்பிக்க கடைசி நாள்:
11.1.2016
கட்டணம் செலுத்த கடைசி நாள்:
13.1.2016
தேர்வு தேதி:
31.1.2016
No comments:
Post a Comment