தேர்தல் கமிஷன் சார்பில், சமீபத்தில், ஒருவருடைய பெயர் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இருந்தால், அவர் தற்போது வசிக்கும் பகுதி தவிர, பிற இடங்களில் இருந்து பெயர் நீக்கப்பட்டது. அதே போல் இறந்தவர்கள், இடம் மாறி சென்றவர்கள் பெயரும் நீக்கப்பட்டன.
அவ்வாறு நீக்கப்பட்டவர்கள் பெயர், தேர்தல் கமிஷன் இணையதளத்தில் (www.elections.tn.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஆட்சேபனை இருந்தால், மாவட்ட தேர்தல் அலுவலரை தொடர்பு கொள்ளலாம்; அல்லது, us1@tnceo.gov.in என்ற முகவரிக்கு, இ - மெயில் அனுப்பலாம்; அல்லது, '1950' என்ற டெலிபோன் எண்ணில் தகவல் தெரிவிக்கலாம்.
No comments:
Post a Comment