எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுத, தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் 29–ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக அரசு தேர்வுகள் துறை கோவை மண்டல துணை இயக்குனர் கா.திருநாவுக்கரசு வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வரும் மாணவ–மாணவிகளுக்கான பொதுத்தேர்வு வருகிற 2016–ம் ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. இதன்படி பொதுத்தேர்வை எழுத விரும்பும் தனித்தேர்வர்களுக்காக தனியாக சேவை மையங்கள் அமைக்கப்பட்டு, விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணி கடந்த 11–ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
இதன்படி கோவை கல்வி மாவட்டத்தில் அசோகபுரம் ஆண்கள் பள்ளி, ராஜவீதி துணிவணிகர் சங்க அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சூலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மேட்டுப்பாளையம் நகராட்சி பள்ளி ஆகிய 4 பள்ளிகளில் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
கால அவகாசம் நீட்டிப்பு
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் பள்ளி, பொள்ளாச்சி நகராட்சி பெண்கள் பள்ளி, வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய 3 மையங்களும் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த மையங்களில் தனித்தேர்வர்கள் பொதுத்தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பித்து வருகிறார்கள். இதற்கு வருகிற 24–ந் தேதி கடைசிநாள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் விண்ணப்பிக்க 29–ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. மிலாடிநபி, கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக, அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்த நீட்டிப்பு செய்யப்பட்டு இருக்கிறது. எனவே தனித்தேர்வர்கள் 29–ந் தேதி வரை பொதுத்தேர்வுக்கு பதிவு செய்து கொள்ளலாம்.
தேர்வு கட்டணம்
தேர்வு கட்டணம் ரூ.125, இணையதள பதிவு கட்டணம் ரூ.50 என மொத்தம் ரூ.175 செலுத்த வேண்டும். இதை தேர்வு கட்டணத்தை பணமாக செலுத்த வேண்டும். பார்வையற்றோர்க்கு தேர்வு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவு செய்தபின், அதற்காக ஒப்புகைச்சீட்டு வழங்கப்படும். அதை பத்திரமாக வைத்து கொள்ள வேண்டும். பின்னாளில் அதை பயன்படுத்தியே நுழைவுச்சீட்டு பெற முடியும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment