Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
 • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
 • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

  Thursday, December 24, 2015

  புதுக்கோட்டையில் நடைபெற்றுவரும் அரசுப்பள்ளி மாணவா்களுக்கான உண்டு,உறைவிட சிறப்புப்பயிற்சி முகாமில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி. திருச்சி வருமான வரித்துறை இணை ஆணையா் திரு வி. நந்தகுமார் பங்கேற்று ஆலோசனைகள் வழங்கினார்.


  புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தமிழ் வழியில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மீத்திறன் மாணவா்களை தோ்ந்தெடுத்து வருகிற ஆண்டில் உயா் கல்வியினை அடையும் வகையிலும். அரசுப் பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண் பெற்று மாநிலத்திலேயே முதன்மையான இடத்தினை பெறும் வகையிலும் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் புதுக்கோட்டை தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் உண்டு. உறைவிட சிறப்புப் பயிற்சி முகாம் நடந்து வருகிறது. இப்பயிற்சி முகாமில் கணிதம், இயற்பியல். வேதியியல். உயிரியல். மற்றும் தமிழ், ஆங்கிலம் ஆகியப் பாடங்களுக்கு சிறந்த பாட நிபுணா்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
  இதன்  ஒரு பகுதியாக மாணவா்களின் மன அழுத்தத்தினை குறைத்து நெறிப்படுத்துவதற்காக உளவியல் நிபுணா். மருத்துவ ஆலோசகா். உயா் கல்வியாளா்கள். ஆகியோர் கலந்துகொள்ளும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று 23ந்தேதி( புதன்கிழமை) நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் மாவட்டமுதன்மைக்கல்வி அலுவலா் திருமதி செ.சாந்தி வரவேற்று பேசினார். இதில் சிறப்பு அழைப்பாளராக திருச்சி வருமான வரித்துறை இணை ஆணையா் திரு வி.நந்தகுமார் கலந்துகொண்டு மாணவ. மாணவிகள் பன்னிரண்டாம் வகுப்பு அரசுப்பொதுத்தோ்வினை எளிதாக எதிர்கொள்ளும் முறையினை விரிவாகவும். விளக்கமாகவும் எடுத்துக்கூறி பேசும்போது கூறியதாவது, பாடப்பகுதியினை தயார் செய்யும்போது முதலில் பாடத்தின் அவுட்லைனை நினைவில் வைத்து மூல வார்த்தைகளை(கீவோ்ட்ஸ்) குறிப்பெடுத்து படிக்கவேண்டும். மேலும் பாடப்பகுதியின் எந்தப் பகுதியில் இருந்து கேள்விகள் கேட்கப்படுகிறது என்பதனையும் நீங்கள் புரிந்து படிக்கவேண்டும். அதனைத்தொடா்ந்து தோ்வு எழுதும்போது கொடுக்கப்படும் கேள்விகளுக்கு மூல வார்த்தைகள் எது என்பதை கண்டறிந்து விடை எழுத வேண்டும். இதுமட்டுமல்லாமல் தோ்வு எழுதப் போகும்போது ஏற்படும் பயத்தினையும். பதட்டத்தினையும் குறைக்கும் வகையில்  தோ்வு தொடங்குவதற்கு சில மணித்துளிகளுக்கு முன்பு தோ்விற்கு படிப்பதை நிறுத்திவிட்டு மனதை அமைதியாக வைத்து சில நிமிடங்கள் தியானம் செய்து உங்களது உடம்பில் உள்ள ஒவ்வொரு பகுதியினையும் மேலிருந்து அதாவது தலையில் இருந்து  கீழாக நினைத்துப் பார்த்து அதன்பின் தோ்வினை எழுத தொடங்கவேண்டும். தோ்விற்கு நீங்கள் தயார் செய்யும்போது மொத்த பாடத்தினையும் படிக்காமல் ஒவ்வொரு பாடத்தினையும் சுருக்கி குறிப்பெடுத்துக்கொண்டு தோ்வின்போது அந்த குறிப்புகளை மீள்பார்வை செய்து தோ்வினை எழுதினால் அதிக மதிப்பெண் பெறலாம். பாலினை எவ்வாறு பதப்படுத்தி வெண்ணை. நெய் எவ்வாறு பெறுகிறோமோ அதைப்போல நீங்கள் உங்களது எண்ணங்களை ஒருமுகப்படுத்தி தன்னம்பிக்கையுடன் படித்தால் அரசுப் பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண் எடுத்து மாநிலத்திலேயே முதன்மையான இடத்தினைப் பெற்று புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பெருமை சோ்ப்பீா்கள் என்று நம்புகிறேன். நான் எவ்வாறு பல்வேறு இடையூறுகளுக்கு இடையே படிக்கும் காலத்தில் பல சிறுகதவுகள் மூடினாலும் என்னுடைய அயராத முயற்சியினால்  ஐ.ஆா்.எஸ் தோ்வில் முதன்மையான இடத்தினைப் பெற்று பெரிய கதவான பாராளுமன்றக்கதவு திறந்து  என்னை பாராட்டியதின் காரணமாக எனக்கு எப்படி நல்ல அங்கீகாரம் கிடைத்ததோ அதைப்போல நீங்களும் அயராத உழைப்பினாலும். விடாத முயற்சியாலும் பல்வேறு இடையூறுகளை தாண்டி   இந்த அரிய வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக்கொண்டு சிறப்பாக இந்த உண்டு, உறைவிடசிறப்புப்பயிற்சி முகாமின் மூலமாக சிறப்புற கல்வி பயின்று உயா்கல்விபயின்று  வாழ்க்கையில் உயா்ந்த இலக்கினை அடையவேண்டும். அதாவது பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் நடைபெறும் இப்பயிற்சியானது உங்களின் எதிர்கால உயா்கல்விக்கு மிகவும் சிறப்பானதாகும்.இவ்வாறு அவா் பேசினார். அதனைத்தொடா்ந்து அவா் சிறப்புப்பயிற்சி பெறும் ஒவ்வொரு மாணவரிடமும் சென்று மாணவா்களின் பெயா்களைக்கூறி கைகுலுக்கி அரசுப்பொதுத்தோவில் அதிக மதிப்பெண் பெற வாழ்த்துக்கூறிய விதம் மாணவா்களிடம் மிகுந்த வரவேற்பினை பெற்றது. பின்னா் மாணவா்களின் சந்தேகங்களுக்கு சிறப்புற பதிலளித்து உற்சாகத்தினையும். தன்னம்பிகையினையும் ஏற்படுத்தினார். இந்த வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் புதுக்கோட்டை கல்வி மாவட்ட, மாவட்டக்கல்வி அலுவலா் திரு ப.மாணிக்கம், பள்ளிகளின் தலைமையாசிரியா்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனா். 

  No comments: