மத்திய அரசின்கீழ் செயல்படும், இந்திய சிறு தொழில் மேம்பாட்டு வங்கியில் (எஸ்.ஐ.டி.பி.ஐ.,) கிரேடு ’ஏ’ பிரிவில் அதிகாரியாக பணிபுரிய ஓர் வாய்ப்பு!
பணியிடம்: உதவி மேலாளர்
காலிப்பணியிடங்கள்: 100
மாத ஊதியம்: தோரயமாக 36 ஆயிரம் ரூபாய்.
வயது வரம்பு: 21 வயதுக்குக் குறைவாகவும் 28 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். எனினும், ஓ.பி.சி., பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது தளர்வு உண்டு.
தகுதிகள்
அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்லூரிகளில், இளநிலை அல்லது முதுநிலை பட்டப் படிப்பில் 60 சதவீதம் தேர்ச்சி பெற்றிக்க வேண்டும். எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினர் 55 சதவீதத்துடன் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது.
சி.ஏ., சி.எஸ்., ஐ.சி.டபுள்யூ.ஏ., சி.எப்.ஏ., எம்.பி.ஏ., இன்ஜினியரிங் அல்லது டிப்ளமோ இன் பேங்கிங் போன்ற, ஏதேனும் ஒரு படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். கணினியை கையாலும் திறன் பெற்றிருப்பது நல்லது.
மாற்றுத்திறனாளிகளும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாது.
தேர்வு முறை
ஆன்லைன் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.
எழுத்து தேர்வு: ’அப்ஜெக்டிவ்’ அடிப்படையில், கணினி அறிவுத் திறன், ஆங்கில மொழிப் புலமை, பொது அறிவு, ரீசனிங் அப்டிடியூட் மற்றும் குவாண்டிடேடிவ் அப்டிடியூட். ‘டிஸ்கிரிப்டிவ்’ அடிப்படையில் ஆங்கில மொழி மற்றும் வரைவு திறன் (டிராப்டிங் ஏபிலிட்டி).
இலவச பயிற்சி
விண்ணப்பதாரர்கள் இத்தேர்வுக்கு எளிதில் தயாராவதற்காக, இந்திய சிறு தொழில் மேம்பாட்டு வங்கியின் சார்பில், 14 மையங்களில் 8 நாட்கள் ‘பிரி-ரெக்ருட்மென்ட் டிரைனிங்’ எனும் இலவச பயிற்சி வகுப்புகள் வழங்கப்படுகிறது.
பயிற்சி மையங்கள்: அகமதாபாத், பெங்களூரு, சண்டிகர், சென்னை, கோவை, கவுகாத்தி, ஹைதராபாத், இந்தூர், ஜெய்ப்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை/தானே/நவி மும்பை, புதுதில்லி மற்றும் புனே.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 11
மேலும் விவரங்களுக்கு: www.sidbi.in
No comments:
Post a Comment