சத்துணவு ஊழியர்களை அரசு ஊழியர்களாக அங்கீகரிக்க வேண்டுமென தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. திருவாரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதர தீர்மானங்கள்:
சத்துணவு ஊழியர்களை அரசு ஊழியர்களாக அங்கீகரிக்க வேண்டும், கல்வி மற்றும் பணிமூப்பு அடிப்படையில் பொருத்தமானத் துறைகளில் மாற்றுப் பணிகளை வழங்க வேண்டும், அரசால் உறுதியளிக்கப்பட்டு நிறைவேற்றப்படாமல் உள்ள பல்வேறு கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
மாநில சங்க நிர்வாகிகளை அழைத்து தமிழக முதல்வரும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சரும் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டும், போராட்டக் காலங்களில் காவல்துறையினரை வைத்து அச்சுறுத்துவதும், தடியடி நடத்துவதும் போன்ற ஜனநாயக விரோதச் செயல்களை அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
No comments:
Post a Comment