தாமதத்தை தவிர்க்க மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களுக்கு ஊர்திப்படி வழங்கும் அதிகாரத்தை துறைத்தலைவர்களிடம் இருந்து மாவட்ட அலுவலர்களுக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது.அரசு அலுவலகங்கள், பள்ளிகள், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் ஊர்திப்படி வழங்கப்படுகிறது. இதனை பெற அவர்கள் தேசிய அடையாள அட்டை, அரசு மருத்துவ குழு அளிக்கும் மாற்றுத்திறன் தன்மை, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் ஒப்புதல் கடிதம் ஆகியவற்றை பெற வேண்டும்.
பின் அவற்றை சம்பந்தப்பட்ட துறைத் தலைவர்களுக்கு அனுப்பி வைத்து அனுமதி பெற வேண்டும். இதற்கு பல மாதங்கள் தாமதம் ஆவதாக, மாற்றுத்திறனாளிகள் புகார் தெரிவித்தனர்.
தாமதத்தை தவிர்க்க, தேசிய அடையாள அட்டை, அரசு மருத்துவ குழு அளிக்கும் மாற்றுத்திறன் தன்மை, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் ஒப்புதல் கடிதத்தை சான்றாக ஏற்று, அந்தந்த துறைகளின் மாவட்ட அலுவலர்களே ஊர்திப்படி அனுமதிக்கலாம் என, மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் அரசுக்கு பரிந்துரை செய்தார்.
இதையடுத்து மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களுக்கு ஊர்திப் படி வழங்கும் அதிகாரத்தை துறைத்தலைவர்களிடம் இருந்து மாவட்ட அலுவலர்களுக்கு மாற்றி நிதித்துறை செயலர் சண்முகம் உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment