புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என ஓய்வு பெற்ற ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் சங்கம் சார்பில் ஓய்வூதியர் தினம் குடிமங்கலம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. இதற்கு, மாவட்டத் தலைவர் பி.நாகராஜன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சி.ஜெயபிரகாசம் முன்னிலை வகித்தார்.
இதில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:
அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ. 3,500 வழங்க வேண்டும். ஓய்வூதியர்களின் பாதுகாப்பு நிதியை ரூ. 1.50 லட்சமாக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநிலப் பொதுச் செயலாளர் மா.நாட்ராயன், மாநிலச் செயலாளர் ச.செல்லத்துரை, முன்னாள் மாநிலச் செயலாளர் அ.நிசார் அகமது ஆகியோர் பேசினர். மாவட்டப் பொருளாளர் டி.வெள்ளைசாமி நன்றி கூறினார். இதில், வெள்ள நிவாரண நிதியாக ரூ. 4 ஆயிரம் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment