தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, சிவகங்கை மாவட்டச் செயற்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் தாமஸ் அமலநாதன் தலைமையில் சிவகங்கையில் சனிக்கிழமை (19.12.15) நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன் அனைவரையும் வரவேற்று தீர்மானங்களை முன்மொழிந்தார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் புரட்சித்தம்பி முன்னிலை வகித்தார். மாவட்டப் பொருளாளர் குமரேசன், மாநிலச்செயற்குழு உறுப்பினர் வேதராஜசேகரன், வட்டாரச் செயராளர்கள் ஜெயக்குமார், சகாயதைனேஸ், ஜேம்ஸ் கென்னடி, சத்தியேந்திரன், பால்துரை மற்றும் சாஸ்தா சுந்தரம், அதிசயராஜ் உள்ளிட்ட பல்வேறு வட்டாரங்களைச்சார்ந்த மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. சென்னை மற்றும் கடலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில்; மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உயிர் நீர்த்த பொதுமக்களுக்கும், இயக்க முன்னோடிகளுக்கும் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
2. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் இரண்டாம் கட்டமாக 20 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்பட உள்ள வெள்ள நிவாரண உதவியில் மாவட்டத்தில் உள்ள ஆசிரியர்களின் பங்களிப்பையும் வழங்குவது என முடிவாற்றப்பட்டது.
3. பி;ப்ரவரியில் தூத்துக்குடி மாவட்டம் கோயில்பட்டியில் நடைபெறும் மாநில மாநாட்டிற்கு முன்னோட்டமாக மாவட்ட மற்றும் வட்டாரங்களில் பொதுக்குழு கூட்டங்களை நடத்துவது எனவும் அதில் மாநிலப் பொறுப்பாளர்களை பங்கேற்கச் செய்வது எனவும் முடிவாற்றப்பட்டது.
4. மத்திய அரசு அமுல்படுத்தவுள்ள புதிய கல்விக்கொள்கையில் உள்ள ஆபத்துகள் குறித்து ஆசிரியர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட அளவில் கருத்தரங்கு நடத்துவது என முடிவாற்றப்பட்டது.
5. சிங்கம்புணரி, எஸ்.புதூர், கல்லல், வட்டாரங்களில் ஆசிரியர் நலன்களுக்கு எதிராக செயல்படும் உதவி மற்றும் கூடுதல் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்களின் செயல்பாடுகளை இச்செயற்குழு கண்டிக்கிறது. இது சம்பந்தமாக முதல்கட்ட பேச்சுவார்த்தையினை மாவட்ட நிர்வாகிகள் மேற்கொள்வது எனவும், உடன்பாடு ஏற்படாத நிலையில் இயக்க நடவடிக்கை மேற்கொள்ள வட்டாரச் செயற்குழவினை இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
6. மாவட்;டத்தில் காலியாக உள்ள தலைமையாசிரியர் பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த ஆசிரியர்களை பதவி உயர்வு மூலம் நிரப்பிட மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர்களை இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
7. மாநிலம் முழுமைக்கும் உள்ள பட்டதாரி காலிப்பணியிடங்களுக்கு மீண்டும் பதவி உயர்வு கலந்தாய்வை நடத்திட தொடக்கக்கல்வி இயக்குநரை மாநில மையம் மூலம் நிர்பந்திப்பது எனவும் இச்செயற்குழு முடிவாற்றுகிறது.
8. பள்ளிகளில் துப்புரவு பணியினை மேற்கொள்ள பணியாட்களை நியமிக்க வேண்டுமென தமிழக அரைச இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
9. மூம்றாம் பருவத்திற்கான பாடப்புத்தகங்களை உடனடியாக பள்ளிகளுக்கே நேரடியாக வழங்கவேண்டுமென இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
No comments:
Post a Comment