மாவட்ட அரசு ஊழியர்களுக்கான துறைத் தேர்வுகள் வரும் செவ்வாய்க்கிழமை (டிச.22) தொடங்கி, 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. திருவண்ணாமலை-செங்கம் சாலையில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தேர்வுக் கூடங்களில் இந்தத் தேர்வுகள் நடைபெறுகின்றன. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் இந்த துறைத் தேர்வுகளில் அரசு ஊழியர்கள் மட்டும் கலந்து கொள்ளலாம்.
புத்தகத்துடனான இந்தத் தேர்வுகளுக்கு அரசால் வரையறுக்கப்பட்ட புத்தகங்கள் மட்டுமே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படும். தேர்வர்கள் செல்லிடப்பேசி எடுத்து வர அனுமதியில்லை. விதிகளை மீறி தேர்வு அறைக்குள் செல்லிடப்பேசியை கொண்டுவந்தால் அது பறிமுதல் செய்யப்பட்டு, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், முறைகேடுகளில் ஈடுபடுவோர் உடனடியாக தேர்வு அறையிலிருந்து வெளியேற்றப்படுவர் என்றும் மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் எச்சரித்துள்ளார்.
No comments:
Post a Comment