மாணவ, மாணவிகளுக்காக முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றிய பல்வேறு நலத்திட்டங்களால் தமிழகத்தில் கல்வித் தரம் உயர்ந்து வருகிறது என சட்டப்பேரவை உறுப்பினர் செ.தாமோதரன் தெரிவித்தார்.
கிணத்துக்கடவு சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட முத்துக்கவுண்டனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 46 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது.
மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கி சட்டப்பேரவை உறுப்பினர் செ.தாமோதரன் பேசியது: இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மாணவர்கள் பயன்பெறும் வகையில் விலையில்லா பாடப்புத்தகம், கல்வி உபகரணங்கள், விலையில்லா சைக்கிள் உள்ளிட்ட முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றிய பல்வேறு நலத்திட்டங்களால் தமிழகத்தில் கல்வித் தரம் உயர்ந்து வருகிறது என்றார். நிகழ்ச்சியில், அதிமுக நிர்வாகிகள் ராஜமாணிக்கம், மணிமுருகேசன், மூர்த்தி, குயில்சாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment