Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, December 19, 2015

    பள்ளி வயது வளர் இளம் பெண்கள் எவ்வாறு தன் சுத்தம் பேண வேண்டும்? மருத்துவர் அறிவுரை

    தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி 6,7,8 வகுப்பு மாணவிகளுடன் மருத்துவர் பார்கவி மணிவண்ணன் வளர் இளம் பெண்களுக்கான தொற்றா நோய் குறித்த விழிப்புணர்வு கலந்துரையாடல் நடத்தினார்.


                                             கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு வந்திருந்தோரை 7ம் வகுப்பு மாணவி ராஜேஸ்வரி  வரவேற்றார்.தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் தலைமை தாங்கினார் .செவிலியர் சங்கீதா முன்னிலை வகித்தார். மருத்துவர் பார்கவி மணிவண்ணன் வளர் இளம் பெண்களுக்கான தொற்றா நோய் குறித்தும் ,அது வருவதற்கான காரணம் என்ன?அதனை எவ்வாறு நிவர்த்தி செய்வது என்பது பற்றி மூன்று நாட்கள் என்கிற தலைப்பில் விளக்கி கூறினார்.பொதுவாகவே காய்கறி ,பேரிச்சம்பழம் ,பால் போன்றவை தினசரி உணவில் சாப்பிட வேண்டும் என்றார்.இரத்த கொதிப்பு,சர்க்கரை போன்றவை முப்பது வயதில் வந்து விடுகிறது.ஆரம்ப சுகாதார நிலையத்தில் இலவசமாக 30 வயதிலியே அவசியம் பரிசோதிக்க வேண்டும்.பள்ளி வயது பெண்குழந்தைகள் எவ்வாறு தன் சுத்தம் பேண வேண்டும் என்பது குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டன.மாதவிடாய் காலத்தில்  தன சுத்தம் பேணுதல் மற்றும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து விளக்கமாக படங்கள் மூலமாக எடுத்துரைத்தார். பெண்களின் மாதவிடாய் காலங்களில் சில வீடுகளில்  வீட்டிலிருந்து வீட்டின் வெளியே ஒரு மூளையில் தள்ளி வைப்பது நடைபெறுவதை ஊடகங்களின் வழியாக அறிந்ததாகவும்,அது தவறான நடைமுறை என்றும் அதற்கான விளக்கங்களை கூறினார்.மாதவிடாய் என்பது பெண்களின் உடலில் இயற்கையாக நடைபெறுவது என்றும்,இதற்காக வீட்டிலிருந்து தள்ளி வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்தார்.இரத்தபோக்கு  தொடர்ந்து 6நாட்களுக்கு மேல் இருந்தால் உடன் மருத்துவரை அணுகுமாறும் அறிவுரை வழங்கினார்.

                                                                  அசைவ உணவை உண்ணுதலைப் பெரும்பாலும் தவிர்த்தல் நல்லது.எந்த உணவையும் அதிகமாக எண்ணெயில் பொரித்து உண்ணுதல் கூடாது.மீன் உணவு நல்லது.முட்டையில் மஞ்சள் கருவை 30 வயது முதல் தவிர்த்தல் நல்லது.

                               செவிலியர் சங்கீதா மழைகால தொற்று நோய்கள் தொடர்பாக தெளிவாக எடுத்து கூறினார்.தினசரி மாணவர்களின் உடல் சுத்தம் செய்வது எப்படி என்பது குறித்தும் எடுத்து கூறினார். மாணவிகள்  பரமேஸ்வரி, தனம்,தனலெட்சுமி ,கார்த்திகா உட்பட மாணவிகளின் பெற்றோரும் கேள்விகள் கேட்டு பதில் பெற்றனர்.மாணவிகள் கேள்வி கேட்கும்பொழுது பெற்றோர்களும் உடன் இருந்தனர்.ஆசிரியை செல்வ மீனாள் மாணவிகளின் கேள்விகளை ஒருங்கிணைத்து தொகுத்து வழங்கினர்.நிகழ்ச்சியின் நிறைவாக மாணவி முத்தழகி நன்றி கூறினார்.

    No comments: