வருங்கால வைப்பு நிதியில் இருந்து அவசரத் தேவைக்காக எடுக்கப்படும் பணம், எந்த நோக்கத்துக்காகச் செலவிடப்பட்டது என்பதைத் தெரிவிக்க வேண்டுமென தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பணியில் உள்ள அனைத்து ஊழியர்கள்-ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு பொது வருங்கால வைப்பு நிதியாக, மாத ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படுகிறது. மொத்தமாகச் சேரும் பணம், அவர்கள் ஓய்வு பெறும் காலத்தில் வழங்கப்படுகிறது.
பணிக் காலத்தில் ஏதேனும் அவசரத் தேவைக்காகவும் பணத்தை எடுத்துக் கொள்ள வழி செய்யப்பட்டுள்ளது.இந்த நிலையில், பொது வருங்கால வைப்பு நிதியில் இருந்து பணம் எடுக்கப்படும்போது அது எந்த நோக்கத்துக்காகச் செலவிடப்பட்டது என்பதை தமிழக அரசுக்குத் தெரிவிக்க வேண்டும்.
இதுகுறித்த அரசு உத்தரவில், ஊழியர்கள் எந்த நோக்கத்துக்காக பொது வருங்கால வைப்பு நிதியில் இருந்து பணத்தைப் பெற்றார்களோ, அந்த நோக்கத்துக்காகத்தான் பணம் செலவிடப்பட்டது என்பதைத் தெரிவிப்பதற்கான சான்றுகளை அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment