அரசு பள்ளியில், லேப்-டாப் கம்ப்யூட்டர்கள் திருடிய, ஆறு மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் மூவருக்கு, கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 மாணவர்களுக்கு வழங்குவதற்காக, 166 லேப்-டாப்கள், கணினி அறையில், பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. கடந்த மாதம், 13ம் தேதி இரவு, அறையின் பூட்டை உடைத்து, 23 லேப்-டாப்களை, யாரோ திருடிச் சென்று விட்டனர்.
போலீசார் வழக்குப் பதிவுஇதுகுறித்து, கண்ணமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், அதே பள்ளியில் படிக்கும், ஆறு மாணவர்களை, சந்தேகத்தின் படி, போலீசார் விசாரித்தனர்; லேப்-டாப் திருடியதை அவர்கள் ஒப்புக் கொண்டனர்.
கைதான அந்த மாணவர்களிடம், போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தியதில், அவர்களில் மூன்று மாணவர்களுக்கு கொலை மற்றும் கொள்ளை வழக்கிலும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
கல்லை போட்டு கொலை மே 29ல், வேலுார் மாவட்டம், கட்டாயம்பட்டு அருகே, சரவணன், 40, என்பவர், வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த போது, அவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்து, 15 சவரன் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது. அந்த வழக்கில், மூன்று மாணவர்களுக்கு தொடர்பு இருப்பதாக, போலீசார் கூறுகின்றனர்.
கைதான மாணவர்களில், ஐந்து பேர், பிளஸ் 1 மற்றும் ஒருவர், பிளஸ் 2 படிக்கிறார். கொலை வழக்கில் சிக்கிய மூவரில், இருவர் பிளஸ் 1 படிக்கின்றனர்.
No comments:
Post a Comment