வெள்ளம் பாதித்த சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலுார் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லுாரிகள், ஒரு மாதத்துக்கு பின், இன்று
செயல்பட துவங்கின.
இம்மாவட்ட பள்ளிகளில், ஜனவரி முதல் வாரத்தில், அரையாண்டு தேர்வு நடக்கும் என, கன மழைக்கு முன் அரசு அறிவித்திருந்தது. தற்போது, அதை நடத்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இன்னும், 10 நாட்களில், மிலாது நபி மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகை வருகிறது. எனவே, அரையாண்டு தேர்வு மற்றும் கிறிஸ்துமஸ் கால விடுமுறை குறித்து, அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை.இந்நிலையில், அரையாண்டு தேர்வு பற்றி, அரசு தரப்பில் தீவிர ஆலோசனை துவங்கி உள்ளது.
இது குறித்து, அதிகாரி ஒருவர் கூறியதாவது:மாணவர்கள் பாதிக்கக் கூடாது; அதே நேரத்தில், தேர்வு இல்லை என்ற அலட்சியமும் வந்துவிடக் கூடாது.எனவே, கிறிஸ்துமஸ் முன்னிட்டு, 24ம் தேதி முதல், 27ம் தேதி வரை, நான்கு நாட்களுக்கு மட்டும் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு விடுமுறை; மற்ற மாவட்டங்களுக்கு, 31 வரை விடுமுறை அளிப்பது குறித்து பரிசீலித்து வருகிறோம்.அரையாண்டு தேர்வை பொறுத்தவரை, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2க்கு குறுகிய கால கட்டத்தில், ஜனவரி முதல் வாரத்தில் நடத்தப்படலாம். மற்ற மாணவர்களுக்கு பாடங்கள் முடித்திருந்தால், 2ம் பருவத் தேர்வு முடிக்காவிட்டால், தேர்வை ரத்து செய்வது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளோம்; முதல்வரின் ஒப்புதல் பெற்று, அறிவிப்பு வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment