16 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இட மாற்றம் செய்து தமிழக அரசு நேற்று உத்தரவிட்டு உள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
* கட்டாய காத்திருப்போர் பட்டியலில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு எம்.எஸ்.முத்துசாமி, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு
வாரியத்தின் போலீஸ் சூப்பிரண்டாக மாற்றப்பட்டுள்ளார்.
* தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் போலீஸ் சூப்பிரண்டாக இருந்து வந்த பி.சாமுண்டீஸ்வரி, தமிழ்நாடு போலீஸ்
அகாடமியின் போலீஸ் சூப்பிரண்டாக பதவி வகிப்பார்.
* தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் போலீஸ் சூப்பிரண்டாக இதுநாள் வரை இருந்து வந்த ஆர்.லலிதா லட்சுமி, இனி மத்திய
சி.பி.சி.ஐ.டி. துணை கமிஷனராக பதவி வகிப்பார்.
* மத்திய சி.பி.சி.ஐ.டி. துணை கமிஷனராக பதவி வகித்து வந்த எஸ்.செல்வக்குமார், இனி வண்ணாரப்பேட்டை துணை கமிஷனராக
பதவி வகிப்பார்.
* கட்டாய காத்திருப்போர் பட்டியலில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு பி.மகேந்திரன், இனி ஆவடி பட்டாலியன் (ரெஜிமெண்டல் சென்டர்)
கமாண்டராக பதவி வகிப்பார்.
* ஆவடி பட்டாலியன் (ரெஜிமெண்டல் சென்டர்) கமாண்டராக இதுநாள் வரை பதவி வகித்த ஏ.ராதிகா, இனி சி.பி.சி.ஐ.டி. போலீஸ்
சூப்பிரண்டாக பதவி வகிப்பார்.
* சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த பி.பெருமாள், இனி திருவல்லிக்கேணி துணை கமிஷனராக பதவி வகிப்பார்.
* திருவல்லிக்கேணி துணை கமிஷனராக இருந்த அனில் குமார் கிரி, அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார்.
* அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியா உல் ஹக், சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக மாற்றப்பட்டு இருக்கிறார்.
* சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பதவி வகித்த எம்.துரை, சென்னை போக்குவரத்து (கிழக்கு) துணை கமிஷனராக
நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
* சென்னை போக்குவரத்து (கிழக்கு) துணை கமிஷனராக இருந்து வந்த எஸ்.ராஜேந்திரன், மாதவரம் துணை கமிஷனராக மாற்றப்பட்டு
உள்ளார்.
* மாதவரம் துணை கமிஷனராக இருந்த எஸ்.விமலா, சென்னை உளவுப்பிரிவு துணை கமிஷனராக இனி பணியில் தொடருவார்.
* புளியந்தோப்பு துணை கமிஷனர் ஆர்.சுதாகர், அம்பத்தூர் துணை கமிஷனராக மாற்றப்பட்டு உள்ளார்.
* அம்பத்தூர் துணை கமிஷனராக இருந்து வந்த ஏ.மயில்வாகனன், புளியந்தோப்பு துணை கமிஷனராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
* சென்னை நவீன கட்டுப்பாட்டு அறை துணை கமிஷனர் ஆர்.சிவக்குமார், கோவை மாநகர போக்குவரத்து போலீஸ் துணை
கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
* கோவை மாநகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனராக இருந்த டி.கே.ராஜசேகரன், சென்னை நவீன கட்டுப்பாட்டு அறை துணை
கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment