மத்திய பிரதேச மாநிலம் இந்துாரில், தனியார் பள்ளி முதல்வரிடம் இருந்து, 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற, மாவட்ட கல்வி அதிகாரி கைது செய்யப்பட்டார்.
மாணவன் ஒருவனின் தந்தை கொடுத்த புகாரிலிருந்து, பள்ளி முதல்வரை விடுவிப்பதற்காக, மாவட்ட கல்வி அதிகாரியான கிஷோர் ஷிண்டே, 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். அதன்படி, லஞ்சத்தில் முன்பணமாக, 20 ஆயிரம் ரூபாயை, பள்ளி முதல்வரிடமிருந்து ஷிண்டே வாங்கிய போது, லோக் ஆயுக்தா அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment