அண்ணா பல்கலை இணைப்பு பெற்ற இன்ஜினியரிங் கல்லுாரிகளில், முதலாமாண்டு மாணவர்களுக்கு, 10ம் தேதி முதல் தேர்வுகள் துவங்கும் என, அறிவிக்கப்பட்டது.
வெள்ளத்தில், பாட புத்தகங்களையும், தேர்வு நுழைவுச்சீட்டுக் களையும் மாணவர்கள் இழந்துள்ளனர். எனவே, இந்த அறிவிப்புக்கு தடை விதிக்க வேண்டும்; தேர்வை ஜனவரிக்கு தள்ளிவைக்க வேண்டும் என, அப்துல்கலாம் விஷன் இந்தியா அறக்கட்டளை என்ற அமைப்பு சார்பில், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் முன், நேற்று முறையிடப்பட்டது.இதுகுறித்து, அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்கும்படி, அரசு வழக்கறிஞருக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை பிற்பகலுக்கு தள்ளிவைத்தனர்.
வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அண்ணா பல்கலை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் வருமாறு:வெள்ளம் பாதித்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் கடலுார் மாவட்ட இன்ஜினியரிங் கல்லுாரிகளில், முதல் செமஸ்டர் தேர்வுகள், 28ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகின்றன. மற்ற கல்லுாரிகளுக்கு, ஏற்கனவே அறிவித்த தேதிகளில் நடத்தப்படும். கிண்டி இன்ஜினியரிங் கல்லுாரி, எம்.ஐ.டி., உட்பட, நான்கு தன்னாட்சி கல்லுாரிகளுக்கு, 2016 ஜனவரி, 2ம் தேதி முதல் தேர்வுகள் நடத்தப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டது. இந்த விவரங்களை, உடனடியாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, அதுபற்றிய மனுவை நாளை தாக்கல் செய்யுமாறு, பல்கலை நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டது.
No comments:
Post a Comment