'பட்டாசால் ஏற்படும் உடல் நல பாதிப்பு குறித்து, மாணவர்களிடம் அறிவுறுத்த வேண்டும்; பட்டாசு பயன்படுத்த வேண்டாம் என, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்' என, ஆசிரியர்களுக்கு, அரசு உத்தரவிட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட்டில், அர்ஜுன் கோபால் என்பவர் தாக்கல் செய்த வழக்கின் அடிப்படையில், மாணவர்களிடம் பட்டாசு வெடிப்பால் ஏற்படும் தீமைகள் குறித்து, எச்சரிக்கை செய்யுமாறு, நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
அதன் அடிப்படையில், மத்திய மனிதவள மேம்பாட்டு துறை, தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதன் படி, அத்துறையின் முதன்மை செயலர் ஹன்ஸ்ராஜ் வர்மா, பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள வழிகாட்டுதலில், 'மாணவர்கள், பட்டாசு பயன்படுத்துவதை தவிர்க்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கேட்டுக் கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment